சென்னை,ஜன.1- தமிழ்நாடு அரசு அகவிலைப் படியை அறிவித்து உள்ளது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் அகவிலைப் படியை உயர்த்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப் பட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். ஏற்கெனவே 34 விழுக்காடாக உள்ள அக விலைப்படி, இன்று முதல் 38 விழுக்காடாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதில் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
இந்த உயர்வால், ஆண்டுக்கு 2 ஆயிரத்து 359 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக் கையை வலியுறுத்தி போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக நிதித்துறை செயலாளர் தலைமையில் பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர், தொடக்கக்கல்வி இயக்குநர், ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும், அந்த குழு பரிந்துரையை பரிசீலித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment