புதுடில்லி, ஜன. 26- நீதிபதிகள் நியமன விவகாரத்தில் உச்சநீதிமன்ற கொலீஜியம் மீது ஒன்றிய அரசு மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.
உளவு அமைப்புகள் வழங்கிய தகவல்களை கொலீஜியம் பொதுவெளியில் வெளியிடுவது முறையல்ல என ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மூத்த வழக்குரைஞர்கள் சவுரவ் கிர்பால், ஜான் சத்யன் ஆகியோரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்குமாறு கொலீஜியம் பரிந்துரைத்திருந்த நிலையில், உளவுத் தகவல்களின் அடிப்படையில் அந்தப் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்க ஒன்றிய அரசு மறுத்திருந்தது.
இந்நிலையில், சவுரவ் கிர் பால், ஜான் சத்யன் ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்க வேண்டு மென ஒன்றிய அரசுக்கு கொலீ ஜியம் கடந்த 19ஆம் தேதி மீண்டும் பரிந்துரைத்தது. அப்போது, ஒன்றிய அரசு வழங்கியிருந்த உளவுத் தகவல்களையும் கொலீ ஜியம் தனது அறிக்கையில் வெளியிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் செவ்வாய்க் கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "உளவு அமைப்புகளான ரா, அய்பி உள்ளிட்டவை வழங்கும் ரகசியத் தகவல்களைப் பொது வெளியில் வெளியிடுவது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும். உளவு அமைப்பைச் சேர்ந்த அதி காரிகள் ரகசியமாகப் பணி யாற்றி வருகின்றனர். அவர்களது உளவுத் தகவல்களைப் பொது வெளியில் வெளியிட்டால், எதிர் காலத்தில் தகவல்களை வழங்கு வதற்கு அவர்கள் தயங்குவார்கள்.
இந்த விவகாரத்தில் உரிய ரேத்தில் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும். இது தொடர் பாக தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூடிடம் வலியுறுத்தப் படும். அவர் நீதித் துறையின் தலைவராக உள்ளார். அரசுக் கும் நீதித் துறைக்கும் இடையே யான பாலமாக ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் செயல்பட வேண்டும். இருவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதே சிறந்தது.
நீதிபதிகள் நியமன விவகாரம் நிர்வாகம் சார்ந்தது. அதற்கும் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத் தரவுக்கும் எந்தவித சம்பந்தமு மில்லை. நீதிபதிகள் நியமனம் குறித்து கருத்து தெரிவிப்பது நீதித் துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதாகாது. நீதிமன்றங் களின் தீர்ப்புகள் குறித்து எவரும் கருத்து தெரிவிக்கக் கூடாது' என்றார்.
கொலீஜியம் எடுக்கும் முடிவு களைப் பொதுவெளியில் வெளியிடும்போது அதில் உளவுத் தகவல்கள் இடம்பெறுவதற்கு ஒன்றிய அரசு எதிர்ப்பு தெரிவிப்பது இதுவே முதல் முறை யாகும்.
நீதிபதிகள் நியமன விவகாரத் தில் ஒன்றிய அரசுக்கும் நீதித் துறைக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தேசிய நீதிபதிகள் நியமன ஆணை யத்தை ஒன்றிய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டில் உருவாக்கி யிருந்த நிலையில், அது அரச மைப்புச் சட்டத்துக்கு எதிரா னது எனக் கூறி அந்த அமைப்பை 2015-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை ஒன்றிய அரசு மீண்டும் கொண்டுவர வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் அண்மையில் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையேயான மோதல்போக்கு தொடர்ந்து வருகிறது. கொலீஜியம் குறித்து அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருவது குறிப்பிடத் தக்கது.
ரிஜிஜு கருத்து:
கபில் சிபல் விமர்சனம்
நீதித் துறையை அவமதிக்கும் வகையில் ஒன்றிய அரசு நடந்து கொள்ளவில்லை என்ற ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் கருத்தை மூத்த வழக் குரைஞர் கபில் சிபல் விமர் சித்துள்ளார்.
டில்லியில் கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, "அரசுக்கும் நீதித் துறைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
அதைக் கொண்டு இருதரப் பினரும் மோதிக் கொள்வதாகவும், மகாபாரதப் போரில் ஈடுபடுவதாகவும் கருதக் கூடாது. நீதித் துறையை அவமதிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒருபோதும் ஈடுபடுவதில்லை' என்றார்.
அவரது கருத்தை விமர்சித்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்குரை ஞருமான கபில் சிபல் ட்விட் டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில்,
"ரிஜிஜுவின் சர்ச் சைக்குரிய கருத்துகள் நீதித் துறையை வலுப்படுத்துகின்றனவா? ரிஜிஜு வேண்டுமானால் அவ்வாறு நம்பலாம். ஆனால், வழக்குரைஞர்கள் அதை நம்ப மாட்டார்கள்' என்று குறிப்பிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment