ஆளுநருக்கு வக்காலத்தா? அண்ணாமலைக்கு சி.பி.எம். கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 22, 2023

ஆளுநருக்கு வக்காலத்தா? அண்ணாமலைக்கு சி.பி.எம். கண்டனம்

சென்னை, ஜன.22 ஆளுநர் ஆர்.என். ரவியின் ஜனநாயக விரோதச் செயல்களுக்கும், அடாவடித்தனத்திற்கும் பாஜகவினர் ஆதரவு தெரிவிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூரில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத் தில் தமிழ்நாடு ஆளுநர் சம் பந்தமாக முதலமைச்சரும், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் நடந்து கொண்ட விதத்திற்கு கண்டனம் தெரி விக்கப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் மன்னிப்பு கோர வேண்டுமென தீர் மானம் நிறைவேற்றப்பட்டுள் ளது.

 கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, திமுக கூட் டணி கட்சிகளை வெகுவாக கண்டித்தும், ஆளுநருக்கு ஆதரவு தெரிவித்தும் பேசி யுள்ளார். அரசியல் சாசன விதி முறைகளுக்கு மாறாக நடந்து கொண்டதற்காக தமிழ்நாடு ஆளுநரும், அவ ருக்கு ஆதரவு தெரிவிக்கும் அண்ணாமலையுமே பகிரங் கமாக மன்னிப்பு கோர வேண்டியவர்கள். ஆளுநரின் ஜனநாயக விரோதச் செயல் களுக்கும், அடாவடித் தனத்திற்கும் பாஜகவினர் ஆதரவு தெரிவிப்பது வன் மையான கண்டனத்திற்குரிய தாகும்.

இந்திய அரசமைப்பின் பிரிவு 200, சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவிற்கு ஆளுநர் ஒப் புதல் தரலாம், ஒப்புதல் தராமல் மறுக்கலாம் அல் லது திருப்பி அனுப்பலாம் என்கிறது. அதன் பொருள் கால வரையறையற்று அதன் மீது முடிவெடுக்காமல் இருக் கலாம் என்பதல்ல. இதற்கு மாறாக சட்டமன்ற மாண்பை சீர்குலைக்கும் வகையில் மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடுவது மக்க ளாட்சி தத்துவத்தை காலில் போட்டு மிதிக்கும் நடவடிக் கையாகும். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தைச் சார்ந்தவர் என்பதால் ஆளுநரின் நடவ டிக்கைகளுக்கு அண்ணா மலையும், அவரது கட்சியும் வக்காலத்து வாங்குவது தமிழ்நாட்டு மக்களை இழிவு செய்யும் நடவடிக்கையாகும். இத்தகைய இழி செயலை புரிந்து வரும் அண்ணா மலையை ஒருபோதும் மக் கள் மன்னிக்கமாட்டார்கள். 

இவ்வாறு தனது அறிக் கையில் அவர் குறிப்பிட் டுள்ளார்.


No comments:

Post a Comment