திருவனந்தபுரம், ஜன.5- சிறுபான் மையினரை பிளவு படுத்தும் சங்பரிவார் நட வடிக்கையை எதிர்ப்பதை வெளிப்படையாக செய்ய வேண் டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
சிறுபான்மையினரை பிளவுபடுத்தும் சங்பரிவார் நடவ டிக்கையை எதிர்க்கவோ, எதிராக ஒன்றுபட்ட குரல் எழுப்பவோ தேவைப்படும்போது, அதை வெளிப்படை யாக செய்ய வேண் டும் என்று மதச்சார்பற்ற கொள் கையுடன அரசியல் மற்றும் இயக்கங்களை பினராயி விஜயன் வலியுறுத்தினார்.
கேரளாவில் இஸ்லாமிய இளைஞர்கள் மாநில மாநாட்டின் நிறைவு கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அவர் கூறியதாவது: ”சிறு சிறு வேறுபாடுகளை எல்லாம் மறந்து ஒன்றுபட்டு நிற்பது அவசியம். இங்கு நாம் விவாதிக்க வேண்டியது வகுப்புவாதம் நோக்கி நாம் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை. மதச்சார்பற்ற சிந்தனையாளர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். வேறுபாடு களை அதிகப்படுத்தும் எந்தவொரு தலையீடும் உதவாது. சிறுபான்மையினரை பிளவுபடுத்தும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்கப்பரிவா ரங்களின் நடவடிக்கையை எதிர்க் கவோ, எதிராக ஒன்றுபட்ட குரல் எழுப்பவோ தேவைப்படும் போது, அதை வெளிப்படையாக செய்ய வேண்டும். அதற்கு யாரும் வாய்மூடி சாட்சியாக இருக்கக் கூடாது. மதத்தை வகுப்பு வாதத்துடன் அடையாளம் காண முடியாது, ஆனால் பா.ஜ.க. மக் களை வகுப்புவாதமாக பிரிக்க ஹிந்து என்ற சொல்லைப் பயன்ப டுத்துகிறது. பா.ஜ.க. சில இடங் களில் சிறுபான்மையினரை திருப் திப்படுத்த முயற்சி செய்கிறது. வடக்கே சிறுபான்மையினர் கொடூரமாகத் தாக்கப்படுகின்றனர். தங்களால் பிளவுபடுத்த முடியாத சூழலில் மதக் கலவரத்தை ஏற்ப டுத்த முயற்சிக்கிறார்கள்” என்று தனது உரையில் கூறினார்.
தமிழ்நாட்டில் அனைவருக்கும்
12 இலக்க எண்ணுடன் மக்கள் அய்.டி.
சென்னை, ஜன. 5- சென்னை நந்தனத்தில், எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் அதில் உள்ள தொழில் நுட்ப பூங் காக்களில் நில ஒதுக்கீடு ஆணை வழங் கும் விழாவில் கலந்து கொண்ட தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:
“தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த சேவைகளை மேம்படுத்த தமிழ் நாடு மின்னணு நிறுவனம், சென்னை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களான கோயம்புத்தூர் மதுரை திருச்சி சேலம் திருநெல் வேலி மற்றும் ஓசூரில் எட்டு தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலங் களை உருவாக்கியுள்ளோம்.
எல்காட் மதுரை மாவட்டம் வடபழஞ்சி மற்றும் கின்னிமங்கலம் கிராமங்களில் 245.17 ஏக்கர் பரப்ப ளவில் ஒரு எல்கோசனை நிறுவி யுள்ளது. எல்காட் திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் 200.04 ஏக்கர் பரப்பளவில் ஒரு எல்கோசெஸ்சை நிறுவியுள்ளது. ஏற்காடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் விஸ்வநாதபுரம் கிராமத்தில் 124.04 ஏக்கர் பரப்பள வில் நிறுவியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பை ஏற்று 2030இல் எட்ட வேண்டிய 1 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார இலக்கை அடைய வேண்டுமென்ற நோக்கில் உழைத்து கொண்டிருக் கிறோம். அய்.டி தளங்களும் தொழில்நுட்ப சேவைகள் அமைப் பும் 18சதவீத வளர்ச்சியை எட்டியிருக்கிறது. திருநெல்வேலி, ஓசூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் நிறுவனங்களை அமைக்க திட்டங் கள் வகுக்கப்பட்டுள்ளது.
அய்.சி.டி அக்காடமி மூலமாக திறன்மேம்பாட்டு நிகழ்வுகளும் நடத்தப்பட உள்ளது. அய்.டி நண் பன் என்னும் அமைப்பில் அரசு சார்ந்த நிகழ்வுகளுக்கான தொழில் நுட்ப செய்திகளைப் பகிர்ந்து வருகிறோம். அந்த அமைப்பில் முதல் நிலையில் தொழில் தொடங்க முனைவோரை இணைய அழைக்கின்றோம். அர சைப் பொறுத்தவரையில் அய்.டி துறை எப்போதும் முதல் நிலை தொழில் முனைவோருக்கு உதவுவ தற்காக காத்திருக்கிறது.
தரவுகளின் அடிப்படையி லான அரசாக இருப்பது காலத்தின் கட்டாயம்,அதற்கான பணிகளின் தொடக்கம் தான் மக்கள் அய்டி திட்டத்தை தொடங்க இருக்கிறது. (ஸ்டேட் பேஃமிலி டேட்டா பேஸ்) சமுதாய மறுமலர்ச்சிக் கான திட்டம் தான் இது. ஆதாரின் பயனும் திட்டமும் வேறு, மக்கள் அய்.டி.யை (ஸ்டேட் பேஃமிலி டேட்டா பேஸ்)ன் திட்டமும் பயனும் வேறு. ஆன்லைன் ரம்மி பலருடைய உயிரைக் குடித்திருக் கிறது. அது வேண்டாமென்பது தான் எங்களின் எண்ணம் என்று கூறினார்.
ஒன்றிய பாஜக அரசால் விண்ணை முட்டும் விலைவாசி
ஏக்சிஸ் மை இண்டியா அமைப்பின் கருத்துக் கணிப்பில் பொதுமக்கள் குமுறல்
புதுடில்லி, ஜன.5- நாடு தழுவிய அளவில் விலைவாசி உயர்வுகுறித்து மக்களிடையே ஏக்சிஸ் மை இண் டியா எனும் அமைப்பு கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.
நாடு தழுவிய அளவில் விலைவாசியானது 2021ஆம் ஆண் டைவிட கடந்த ஆண்டில் (2022) உயர்ந்துவிட்டதாக ஆய்வின்போது 73விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர். வீட்டுக்குத் தேவையான பொது வான பொருட்களுக்கான செலவு, அத்தியாவசியமான மற்றும் அத்தி யாவசியமற்ற பொருட்களுக்கான செலவு, உடல் நலத்திற்கான செலவு, பத்திரிகைகளுக்கான செலவு, பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா வுக்கான செலவு என 5 வகையான செலவினங்கள் கடந்த ஆண்டு எவ்வாறு இருந்தன என்பது தொடர்பாக ஏக்சிஸ் மை இண்டியா எனும் அமைப்பு கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வீட்டுக்குத் தேவை யான பொதுவான பொருட் களுக்கான செலவு கடந்த ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டை விட உயர்ந்திருந்ததாக 73 விழுக்காட் டினர் தெரிவித்துள்ளனர். மருத் துவப் பரிசோதனைகள், ஆரோக்கிய உணவு ஆகியவை அடங்கிய ஆரோக்கியத் திற்கான செலவு கடந்த ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டைவிட உயர்ந்துவிட்டதாக 39 விழுக்காடு குடும்பங்கள் தெரிவித்துள்ளன. விலைவாசி உயர்வுக்கு பணவீக்கம்தான் காரணம் என 50 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு முதலீடுகளை எவ்வாறு திட்டமிடுவீர்கள் என்ற கேள்விக்கு மியூச்சுவல் ஃபண்டு, காப்பீடு, தங்கம், பங்குச் சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்வோம் என 40 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். நிலம் மற்றும் வீடு வாங்குவதில் முதலீடு செய்வோம் என 16 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். குழந்தைகளின் படிப்புக்கு முதலீடு செய்வோம் என 34 விழுக்காட்டினர் தெரிவித் துள்ளனர். மொபைல் மற்றும் இணைய பயன்பாடு அதிகரித்திருப்பதாக 52 விழுக்காட்டினர் தெரிவித்துள்ள னர். சமூக ஊடகங்களில் முகநூல் தான் அதிகம் பயன்படுத்துவதாக 35விழுக்காட்டினர் குறிப்பிட் டுள்ளனர். யூடியூப் பார்ப்பது அதி கரித்திருப்பதாக 25 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment