மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 23, 2023

மறைவு

மறைந்த சேத்தியாத்தோப்பு பெரியார் பெருந்தொண்டர் திராவிடர் கழகத் தலைவர் கு.பட்டு சாமியின் வாழ்விணையர் ப.சாரதாம்பாள் (வயது 91) 21.1.2023 அன்று காலை இயற்கை எய்தினார். இறுதி நிகழ்வில் சேத்தியாத்தோப்பு நகர தலைவர் ராஜசேகரன், மாவட்ட இணை செயலாளர் யாழ் திலீபன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மறைந்த அம் மையாரின் மகன் ஆனந்தன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.

- - - - -

புவனகிரி கழகத் தோழரும் பெருமாத்தூர் பெரியார் பெருந்தொண்டருமான அ.பழனியாண்டியின் மகள் தமிழ்ச்செல்வி 20.1.2023 அன்று மறைவுற்றதை முன் னிட்டு வடலூரில் உள்ள தமிழ்ச்செல்வியின் இல்லத்துக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன், வடலூர் நகர தலைவர் புலவர் ராவணன், நகர அமைப்பாளர் முருகன், ஒன்றிய தலைவர் கனகராஜ் ஆகியோர் நேரில் சென்று உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். பெரியார் பெருந்தொண்டர் பழனியாண்டிக்கு ஆறுதல் கூறினர்.


No comments:

Post a Comment