நீட் விலக்கு மசோதா -ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கம் ஓரிரு வாரத்தில் அனுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 23, 2023

நீட் விலக்கு மசோதா -ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கம் ஓரிரு வாரத்தில் அனுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஜன. 23- நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கம் ஓரிரு வாரத்தில் அனுப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர் களிடம் நேற்று (22.1.2023) கூறியதாவது: சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.230 கோடி யில், சுமார் 4.9 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டு வரும் பன் னோக்கு சிறப்பு மருத்துவமனை பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.

இந்தப் பணிகளை ஜூன் மாதத் துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 209 கிலோ மீட்டர் நீளத்துக்கு, ரூ.699 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 161 கிலோமீட்டர் நீளத்துக்கான மழைநீர் வடிகால் பணிகள், வடகிழக்குப் பருவம ழைக்கு முன்பாகவே கட்டி முடிக் கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந் துள்ளன. அதனால்தான் வடகிழக் குப் பருவமழைக் காலத்தில் சென்னையில் எங்கும் மழைநீர் பாதிப்பு ஏற்படவில்லை. தற்போது, மாநக ராட்சி சார்பில் 48 கிலோ மீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடி கால்கள் கட்டும் பணி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. வட கிழக்குப் பருவமழையைத் தொடர்ந்து, சென்னையில் சாலை களைச் சீர மைக்கும் பணி போர்க் கால அடிப் படையில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணி இன்னும் 4 மாதங்க ளுக்குள் முடிவடை யும்.நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக ஆயுஷ் அமைச்சகத்திலிருந்து சில விளக்கங்கள் கேட்டு கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்துக்கு பதில் அனுப்பும் பணியில் சட்டத் துறை ஈடுபட்டுள்ளது. சட்ட வல்லுநர்களுடன் கலந்துபேசி, இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் ஆயுஷ் அமைச்சத் துக்கு பதில் அனுப்பப்படும். தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு இல்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment