ரத்தாம்!
உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாடப் புத்தகங்கள்
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவர்களுக்கு
1 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தொடங்கியது.
உத்தரவு
தொலைதூர கல்வியை வெளி மாநிலங்களில் நடத்தக் கூடாது என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
மீட்பு
2022ஆம் ஆண்டு மத்திய குற்றப் பிரிவு காவலர் களின், வேகமான நடவடிக்கையால் 565 குற்றவாளி களிடம் இருந்து ரூ.95.85 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 6.591 புகார்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டுள்ளது என சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் தகவல்.
No comments:
Post a Comment