மதச் சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, சமூகநீதி, சமத்துவத்தை சிதைக்கும் பா.ஜ.க. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 21, 2023

மதச் சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, சமூகநீதி, சமத்துவத்தை சிதைக்கும் பா.ஜ.க.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

கம்மம், ஜன.21- தெலங்கானாவின் சிவந்த பூமியாம் கம்மம் நகரில் இருந்து, தேசத்தின் விடுதலையைப் பாது காப்பதற்கான ஒன்றுபட்ட போராட்டம் தொடங்கியது. உரிமைப் போராட்டத்திற்காக, விவசாயிகளின் ரத்தத்தாலும், வியர்வையாலும் சிவந்த  மண், வகுப்புவாத - பாசிச சக்திக்கு எதிராக ஓங்கி ஒலித்தது. எதிர்கட்சிகளின் உரத்த குரலாக கம்மம் நகரில் கடந்த 18.1.2023 அன்று மாலை நடந்த மாபெரும் பேரணி - பொதுக் கூட் டத்தை கேரள முதலமைச்சர் பின ராயி விஜயன் தொடங்கி  வைத்தார். 

டில்லி விவசாயிகள் போராட் டத்திற்குப் பிறகு நாட்டிலேயே அதிக அளவில் திரண்ட மக்கள் கூட்டம் இது என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர். 

தெலங்கானாவின் கம்மம் நகரில் பாரத் ராட்டிர சமிதி (பிஆர்எஸ்) ஏற்பாடு செய்த இப்பேரணி எதிர்க் கட்சித் தலைவர்களின் கூட்டமாக வும் மாறியது. மாலையில் கூட்டம்  தொடங்கிய பிறகும், தெலங்கானாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளை ஞர்கள் மற்றும் முதியவர்கள் மைதானத்தில் குவிந்தனர். பேரணி யில், பாஜகவுக்கு எதிராக ஒன்று பட்ட போராட்டம் என்ற முழக்கம் எழுப்பப்பட்டது.

பினராயி விஜயன்

பொதுக் கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியதாவது: சுதந்திரப் போராட் டத்தின் போது பெற்ற உரிமை களைப் பாதுகாக்க ஒன்றுபட்ட போராட்டம் அவசியம்.    சுதந்திரப் போராட்டத்தின் மூலம் நாம் பெற்ற மதச்சார் பின்மை, ஜனநாய கம், கூட்டாட்சி, சமூக நீதி, சமத் துவம் என அனைத்து உரிமைகளை யும் பாஜக சிதைக் கிறது. நாட்டின் இந்த பின்தங்கிய நிலையை எதிர்த் துப் போராடுவது நமது பொறுப்பு. மக்கள் போராட்ட வரலாற்றைக் கொண்ட தெலுங்கானாவின் கம்மம் மண்ணில் இருந்து இதற்கான கூட்டு எதிர்ப்பு துவங்குகிறது.

ஆளுநர்களின் அட்டூழியம்

ஆளுநர்களைப் பயன்படுத்தி மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் முயற்சி நடைபெறுகிறது. உயர்கல்வித்துறையின் மேம் பாட்டை ஆளுநர் தவறாக பயன் படுத்துகிறார். மாநில  சட்டமன்றங் களில்  நிறைவேற்றப்பட்ட மசோ தாக்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. ஜனநாயகத்தையும் நாட்டையும் காப்பாற்ற, இதுபோன்ற நடவடிக் கைகளை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது.  ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அர சுகள் குதிரை பேரம்  மூலம் கவிழ்க் கப்படுகின்றன. வேற்றுமையில் ஒற்றுமை என்பது முத்திரையாக இருக்கும் நமது நாட்டில் ஹிந்தியை திணிக்கும் முயற்சி நடக்கிறது. நீதித்துறையின் சுதந்திரம் கூட தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.  

 ஒன்றிய அரசின் பிளவு படுத்தும் கொள்கைகளுக்கு எதிரான மக் களின் கோபத்தை திசை திருப்பும்  வகையில் இந்துத்துவ வாதத்தை முன்னிறுத்தி நாட்டில் வகுப்புவாத பிளவை ஏற்படுத்த முயற்சி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.  

இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.

கே. சந்திரசேகர ராவ்

தெலுங்கானா முதலமைச்சர் 

கே. சந்திரசேகர ராவ், பேசியதாவது: ''பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடி யாகவே நான் இதைச் சொல்கிறேன். இந்த தேர்தலுடன் நீங்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும். ஏனெனில், தனி யார்மயம்தான் உங்கள் கொள்கை. தேசியமயமாக்குவதுதான் எங்கள் கொள்கை.'' என தெரிவித்தார்.

 நிகழ்ச்சியில் பேசிய அகிலேஷ் யாதவ், ''2024 தேர்தலுக்கு இன்னும் 400 நாட்கள்தான் உள்ளன. பாஜக தனது நாட்களை எண்ணத் தொடங்கி உள் ளது. தற்போதைய ஆட்சியின் காலம் முடிந் ததும் அது கூடுதலாக ஒரு நாள் கூட ஆட்சியில் இருக்காது.'' என குறிப் பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர்கள்  அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் சிங் மான், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகி லேஷ் யாதவ், சிபிஅய் பொதுச்செய லாளர் து.ராஜா, தெலங்கானா மாநில சிபிஅய்(எம்) செயலாளர் தம்மினேனி வீரபத்ரம் உள்ளிட் டோர் பேசினர்.


No comments:

Post a Comment