சுயமரியாதை சுடரொளி கா.மா.குப்புசாமி சிலைக்கு மாலை அணிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 11, 2023

சுயமரியாதை சுடரொளி கா.மா.குப்புசாமி சிலைக்கு மாலை அணிவிப்பு

தஞ்சை, ஜன. 11- திராவிடர் கழக மேனாள்  பொருளாளர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி தாளாளரும்  மறைந்த, தஞ்சை கா.மா. குப்புசாமி அவர்களின் 96 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா  8.1.  2023 அன்று காலை 10:30 மணியளவில் பெரியார் பாலி டெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள கா.மா. குப்புசாமி அவர்களின் உருவச் சிலைக்கு  தஞ்சை மாவட்ட கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொண்டாடப்பட்டது,

பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்த கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள்:

தஞ்சை மண்டல திராவிடர் கழக தலைவர் மு.அய்யனார் பெரியார் பாலி டெக்னிக் கல்லூரியின் முதல்வர் மல்லிகா,  தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாநில பகுத்தறிவு  ஊட கத்துறை தலைவர் மா.அழகிரிசாமி, பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் கோபு. பழனிவேல், மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர் அதிரடி அன்பழகன்,  தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் அ. உத்திராபதி, தஞ்சை மாநகர தலைவர் பா. நரேந்தி ரன், பொதுக்குழு உறுப்பினர் விக்கிர பாண்டி மணியன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ச. அழகிரி, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ந. காமராஜ், வல்லம்  நகர தலைவர் ம. அழகிரி, வல்லம் நகர செயலாளர் ராபர்ட்,  மருத்துவக் கல்லூரி பகுதி செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சந்துரு, மாவட்ட தொழிலாளர் அணி செயலா ளர் ஆட்டோ ஏகாம்பரம்,கழக பேச்சா ளர் பூவை புலிகேசி, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுபட்டு இராமலிங்கம், அமிர்தா புத்தக நிலைய உரிமையாளர்,மா. திராவிட செல்வன், திராவிடர் கழகப் பொருளாளர் மறைந்த கா.மா குப்புசாமி குடும்பத்தைச் சார்ந்தவர்கள், கு.பன்னீர்செல்வம். தஞ்சை காமராஜ். பொதுக்குழு உறுப் பினர் ஸ்டாலின். சியாமளா வடுக நாதன். ஆஸ்திரேலியா மணிமாறன், ஸ்டாலின், யோகபிரியா, மணி, சிறீநிதி, ஓட்டுநர் ரவி தஞ்சை கீழவாசல் பகுதி ப. பரமசிவம்  உள்ளிட்ட ஏராளமான கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் மறைந்த பொருளாளர் கா.மா.குப்பு சாமி அவர்களின் உருவச் சிலைக்கும் மாலை அணிவித்து பிறந்தநாள் விழா கொண்டாடி மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment