ஏழு மாதத்திலேயே பிறந்த சா. கெவின் டேனியல் சதுரங்கப்போட்டியில், தரவரிசையில் 43 ஆம் இடத்திலிருந்து 13 ஆம் இடத்திற்கு முன்னேறி பரிசுகள் பல பெற்றுள்ளதை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்துக்கூறி வாழ்த்துப்பெற்றதோடு, அரையாண்டு விடுதலை சந்தா ரூ. 1,000/- வழங்கினார். உடன் கெவினின் தந்தை சாம்சன், ஆசிரியருக்கு கவிதையை நினைவுப்பரிசாக வழங்கிய எழுத்தாளர் கவிதா விலாசம் கே.பாபு, வழக்குரைஞர் தளபதி பாண்டியன் ஆகியோர் இருந்தனர். (பெரியார் திடல், 29-12-2022)
தமிழர் தலைவருடன் சந்திப்பு
நாகர்கோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஆர். பெருமாள்சாமி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்தார்.(31.12.2022,பெரியார் திடல்)
தமிழர் தலைவரிடம் சந்தா
திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்க. நாராயணசாமி தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து ஓராண்டு விடுதலை சந்தா ரூபாய் 2000 வழங்கினார். (31.12.2022,பெரியார் திடல்)
திமுக கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா, துணைச் செயலாளர் அம்பிகாபதி, தகவல் தொழில்நுட்ப அணி பிரகதீஸ்வரன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து ஓராண்டு விடுதலை சந்தா ரூபாய் 2000 வழங்கினர். (31.12.2022,பெரியார் திடல்)
புத்தாண்டு வாழ்த்து
ஊட்டியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜே. ஷேக் அமீன், மனைவி ரெஹானா ஷேக், மகள் பாத்திமா பர் ஹானா ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து களை தெரிவித்துக் கொண்டனர். உடன் சி.கே.பிரித்விராஜ் (31.12.2022,பெரியார் திடல்).
No comments:
Post a Comment