கல்லக்குறிச்சி, ஜன. 26- கல்லக்குறிச்சி மாவட்டத் தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர் கள், தங்களுக்கு விருப்ப மான தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறும் நோக்குடன், வட் டார அளவில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப் பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தீனதயாள் உபத்யாய-கிராமின் கவுசல்ய யோஜனா (ஞிஞிஹி-நிரிசீ) திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு முகாம் 28.1.2023 அன்று காலை 10 மணியளவில் சங்கராபுரம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் சங்கராபுரம் மற்றும் கல்வராயன்மலை வட்டாரத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட வேலை வாய்பற்ற இளைஞர்க ளுக்கு தொழில் சார்ந்த தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற் படுத்தி தரப்படவுள்ளது.
எனவே இவ்வேலை வாய்ப்பு முகாமில் இவ்விரு வட்டாரங்களில் உள்ள தகுதியான அனைத்து ஆண்/பெண் இருபாலரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் கல்வி தகுதிச் சான்றிதழ் களுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஷரவன்குமார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment