சுயமரியாதையை உரசிப் பார்த்தால் அது எதையும் சுட்டெரித்து விடும் திமுக எம்.பி. கனிமொழி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 13, 2023

சுயமரியாதையை உரசிப் பார்த்தால் அது எதையும் சுட்டெரித்து விடும் திமுக எம்.பி. கனிமொழி

சென்னை ஜன 13- சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், பெரம்பூரில் உள்ள தனி யார் பள்ளி வளாகத்தில் மாவட்ட துணைச் செய லாளர் புனிதவதி எத்தி ராசன் தலைமையில், ‘’இனமான பேராசிரியரின் நூற்றாண்டு விழா’’ கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த 500 மகளிர் அணி நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு, புத்தா டைகள், பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக துணை பொதுச் செயலாளர் கனி மொழி எம்பி கலந்து கொண்டு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கி னார். பின்னர் கனிமொழி பேசியதாவது;

இனமானம், தமிழுணர்வு, சுயமரியாதை ஆகியவற்றை உருவகப்படுத்தி பார்த்தோம் என்றால் நம் கண் முன் வந்து நிற்பது பேராசிரியர் உருவம்தான். திமுக.வினரின் மரியாதை மட்டு மில்லாமல், எதிர்க்கட்சியினரின் மரியாதைக்குரி யவர் பேராசிரியர்.

கலைஞரும் நம் தலை வரும் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் பேராசிரியர் ஆலோசனை இல்லாமல் எடுக்க மாட்டார்கள். நேற்று முன்தினம் (9.1.2023) நமக்கு பெரு மைக்குரிய நாள், இருப்பினும் அதில் வருத்தமும் இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்டவர் கள் பெரும் பான்மையானவர்கள் உள்ள இடத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் பெரியார், அண்ணா, அம்பேத்கர், காமராஜர் ஆகியோரை இழிவுபடுத் தியுள்ளார் என்றால் அது வருத்தப் படக்கூடிய ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. ஆனால் அதையும் தாண்டி நாம் பெருமை கொள்ளும் வகையில், ‘‘நீ யாராக இருந்தாலும் தவறு என் றால் அந்த இடத்திலேயே கண்டிப்பேன்’’ என்று தீர் மானம் நிறைவேற்றியவர் நமது முதல்வர். அவுட் ஸ்டாண்டிங் முதலமைச் சராக நமது முதலமைச்சர் சட்டமன்றத்தில் செயல் பட்டதால், ஸ்டாண்ட் அவுட் ஆனார் ஆளுநர்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் இருக்கக்கூடிய காரணத் தால் மக்களுக்கு எதிராக, ஜனநாயகத்திற்கு எதிராக பல்வேறு சட்டங் களை ஒன்றிய அரசு இயற்றி வரு கிறது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமும், இதர எதிர்க் கட்சிகளும் வெளி நடப்பு செய்வோம். ஆனால் ஆளுநர் வெளிநடப்பு என்பது முதல்முறையாக நமது சட்டமன்ற பேர வையில் அரங்கேறி உள்ளது. 1967ம் ஆண்டு நமது பேராசிரியர் நாடா ளுமன்றத்தில், ஒன்றிய அரசின் கருவியாக மாநில அரசை துன்புறுத் தும் ஆளுநர் தேவையில்லை என்று பேசியிருந்தார். தமிழ்நாடு முன் னேறிய நாடுகளை தாண்டி சென்றுக்கொண்டு இருக்கிறது, அது தான் திராவிட மாடல் ஆட்சி என்பதை ஒருவருக்கு நாம் பாடமாக எடுத்து கொண்டு இருக்க முடியுமா, மக்கள் நமக்கு வாக் களித்தது மக்கள் பணி யாற்ற. மக்களுக்காக அரசு செய்யும் பணிகளை ஆளு நருக்கு எடுத்து ரைப்பதற்கு அல்ல என்பதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் தலைவர்கள் எங்களுக்கு அளித் துள்ள இனஉணர்வு, தமி ழுணர்வு, சுயமரியாதை ஆகியவை எங்களை விட்டு என்றும் போகாது. எங்கள் உள்ளே அது என்றும் இருப்பது, அதை சற்று உரசி பார்த்தால் எதையும் சுட்டெரிக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கனி மொழி எம்.பி. பேசினார். விழாவில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, கலாநிதி வீராசாமி எம்பி, தாயகம் கவி எம்எல்ஏ, மகளிர் அணி துணைச் செயலாளர் குமரி விஜய குமார், மண்டல குழு தலைவர் சரிதா, சென்னை மாநகராட்சி  உறுப்பினர் கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment