தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 29 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் கல்வி போன்ற துறைகளில் பல்வேறு துறை களைச் சார்ந்த பெருமக்களுக்கு பெரியார் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 2023 ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது அறிவிக் கப்பட்டது.
தன் முயற்சியால் இசையில் தேர்ந்து குழலாலும் குரலாலும் 40 ஆண்டுகளாக அரிய சாதனைகள் படைத்து வரும் குழலி சைக் கலைஞர், திரைப்படப் பின்னணிப் பாடகர் நெப்போலியன் (எ) அருண்மொழி அவர்களுக்கும், திராவிட இயக்க ஆவ ணங்களைத் தேடிப் பதிப்பித்தும், ஆய்வு களை ஊக்குவித்தும் எழுத்து இதழியல் துறையில் அரும்பணியாற்றியும் வரும் எழுத்தாளர் வீ.மா.ச.சுபகுணராஜன் ஆகி யோருக்கு வழங்கப்படுகிறது.
இந்த விருதுகள் சென்னை பெரியார் திடலில் ஜனவரி 17 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் தொடங்கி நடை பெறவுள்ள திராவிடர் திருநாள் தமிழ் புத்தாண்டு பொங்கல் விழாவில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் வழங்கப்பட உள்ளன.
- கலி. பூங்குன்றன்
ஒருங்கிணைப்பாளர்,
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம்
பெரியார் திடல், சென்னை.
No comments:
Post a Comment