31.1.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பாஜகவுடன் கூட்டணி அமைப்பதை விட என் உயிரை விட தயாராக இருப்பேன், நிதிஷ் குமார் உறுதி.
* மதமாற்ற சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை பிப்ரவரி 3-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்திட உள்ளது.
* ஆர்.எஸ்.எஸ்., மோடி, அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் கோயல் ஆகியோர் மக்களின் வலி உணராதவர்கள் என ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
* ராகுலின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் காங் கிரஸ் கட்சிக்கு நம்பிக்கையையும், ராகுலின் பிம்பத்தையும் உயர்த்தியுள்ளது என்கிறது தலையங்க செய்தி
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தமிழ்நாட்டில் உள்ள ஒரு தொலைதூர மலை கிராமமான கதிரிமலையில் இணையத்தின் உதவியோடு மருத்துவ உதவியை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
*"துளசிதாஸின் ராமசரித்மனாஸின் சில வசனங்களை மொழிபெயர்க்கவும், சூத்திரர்களை பற்றி என்ன கூறப் பட்டுள்ளது” என்பதை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகியிடம் மொழி பெயர்த்து கூறுவதற்கு தான் திட்ட மிட்டுள்ளதாக உ.பி., மாநில சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment