நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது தி.மு.க. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 21, 2023

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது தி.மு.க.

சென்னை, ஜன.21 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஓராண் டுக்கும் மேல் இருக்கும் நிலையில், இப்போதே திட்டங்களை முன்னி றுத்தி சமூகவலைதளம் மற்றும் சுவர் பிரச்சாரத்தை திமுக தொடங்கிவிட்டது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும்மேல் உள்ள நிலையில், தற்போதே பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் அடிப்படைப் பணிகளை தொடங்கி விட்டன. அனைத்து அரசியல் கட்சிகளும் முதல்கட்டமாக, ‘பூத் ஏஜென்ட்’களை நியமிக்கும் பணி களை பெரும்பாலும் முடித்து விட்டன. இதில் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுக, படித் தவர்கள், வழக்குரைஞர்கள், திறமை சாலிகளை தேர்வு செய்து பூத் ஏஜென்ட்களாக நியமித்துள்ளது.

இதுதவிர, திராவிட மாடல் பாசறை கூட்டங்களை இளைஞ ரணி நடத்துவதுடன், திண்ணைப் பிரச்சாரங்களையும் அவ்வப்போது முன்னெடுத்து வருகிறது.  பிரச் சாரங்களை தாண்டி தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், தேர்தலுக்கான முன்னோட்டப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. முக்கியமான திட்டங்களை முன்னி றுத்தி சுவரொட்டிகள் வெளியிட்டு அவற்றை சமூக வலைதளம் மற்றும் அச்சடித்து வெளியிடும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்கள் 

மூலம் பிரச்சாரம்

சமீபத்தில், ‘தலைநிமிர்ந்த தமிழ் நாடு... மனங்குளிருது தினம் தினம்’ மற்றும் ‘மகளிர் உயர மாநிலம் உயரும்’ என்ற தலைப்புகளில் சமூக வலைதளங்களிலும், சுவரொட் டிகள் மூலமும் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. மாவட்டங்கள் தோறும்இந்த சுவரொட்டிகள் அனுப்பப்பட்டு,மாவட்ட செய லாளர்கள் மூலம் விநியோகிக் கப்பட்டு, ஆங்காங்கே ஒட்டப்பட் டன. இவற்றை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் பரப் பினர். இந்த விளம்பரம் பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது அடுத்த பிரச்சார சுவரொட்டிகளை திமுக வெளியிட்டுள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு என்பதை தமிழ்நாடு என்று குறிப்பிடுவதில் சர்சசை கிளம்பியது. எனவே, அடுத்த சுவரொட்டியில் தமிழ்நாடு என்பது தமிழ்நாடாக மாற்றப்பட்டுள்ளது. ‘தலை நிமிர்ந்த தமிழ்நாடு. தனித் துவமான பொன்னாடு’ என்று முகப்பு மாற்றப்பட்டுள்ளது.

மேலும், ஆட்சியில் அறம், அனைவரும் நலம், 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள், நீர்ப்பாசன சாகு படியை 38.94 லட்சம் எக்டேராக உயர்த்தியது, விவசாயிகளுக்கு தனி நிதிநிலை அறிக்கை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1,000 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கியது என்ற அரசின்திட்டங்கள் இந்த சுவரொட்டியில் இடம் பெற் றுள்ளன.

இனி, வாரம்தோறும் ஒரு சாதனையை முன்னிறுத்தி இந்த சுவரொட்டிகள் வெளியிடப்படும் என திமுகவின் தகவல் தொழில் நுட்ப அணியினர் தெரிவித்தனர். 

இதுகுறித்து அவர்கள் கூறும் போது, 

‘‘திமுகவின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் இந்த பிரச்சார சுவரொட்டிகளுக்கு அதிக அளவில் வரவேற்பு உள்ளது. அரசின் திட் டங்களால் பொது மக்கள் பெற்ற பயன்களை வெளிச்சம் போட்டு காட்டுவதுஇதன் நோக்கம். நாடாளுமன்ற தேர்தலில் 40ஆ-ம் நமதே என்பதை உறுதி செய்ய இந்த பிரச்சாரம் கை கொடுக்கும்’’ என்றனர்.


No comments:

Post a Comment