ஈரோடு, ஜன.1 கொடுமணலில் கிடைத்த பழங்கால வரலாற்று சின்னங்கள் குறித்து வருங்கால சந்ததி யினர் தெரிந்து கொள்ளும் வகையில் கொடுமணலில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடுமணலில் கிடைத்த பழங்கால வரலாற்று சின்னங்கள் குறித்து வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் கொடுமணலில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் உள்ளது கொடுமணல் கிராமம். இங்கு சுமார் 2 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததுடன் பெரிய அளவில் தொழில்துறைகளும், வியாபாரங்களும் இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்ததால் 1981-ஆம் ஆண்டு முதல் கொடுமணல் பகுதியில் இதுகுறித்து பல்வேறு ஆய்வு பணிகள் நடைபெற்று வந்தது. பழங்கால பொருட்கள் இதில் முக்கியமாக தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பில் அதன் திட்ட இயக்குநர் ஜெ.ரஞ்சித் தலைமையில் 2020-ஆம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கப்பட்ட 8-ஆவது அகழாய்வின் போது தான் ஏராளமான பழங்காலப் பொருட்கள் கிடைத்தது. இந்த அகழாய்வில் தொழிற்கூடங்கள் மற்றும் கொல்லுப்பட்டறைகள் இருந்த பகுதி, பழங்கால ஈமச்சின்னங்கள் எனப்படும் கல்லறைகள் இருந்த பகுதி, கிணற்று படிக்கட்டுகள் ஆகியவை கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும் ஏராளமான முதுமக்கள் தாழிகள், கத்திகள், ஈட்டிகள், ஆணிகள் போன்ற இரும்பு பொருட்கள், நூற்றுக்கணக்கான கல்மணிகள், வளையல்கள் உள்ளிட்ட அணிகலன்கள், நாணயங்கள், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் என ஏராளமான பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டது.
No comments:
Post a Comment