உருமாறிய கரோனாவுக்கு எதிராக கோவேக்சின் பூஸ்டர் டோஸ் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது - ஆய்வில் கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 2, 2023

உருமாறிய கரோனாவுக்கு எதிராக கோவேக்சின் பூஸ்டர் டோஸ் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது - ஆய்வில் கண்டுபிடிப்பு

ஒமைக்ரான் உள்ளிட்ட உரு மாறிய கரோனாவுக்கு எதிராக கோவேக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி நோய் எதிர்ப்புச்சக்தியை மேம்படுத்துகிறது என ஒரு ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசி என்ற பெயரில் தனியார் தடுப்பூசி மய்யங்களில் போடப்படுகிறது. இந்த தருணத்தில் கோவேக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், பாரத் பயோடெக் நிறுவனமும் கடந்த ஜனவரி மாதம் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை இப்போது வெளியிட்டுள்ளன.

இந்த ஆய்வின்போது, கோவேக்சின் 2ஆவது டோஸ் தடுப்பூசியை செலுத்தி 6 மாதங்களுக்கு பின்னர் 51 பேரது மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களுக்கு 2ஆவது டோஸ் தடுப்பூசி போட்டு 215 நாட்களுக்கு பின்னர் கோவேக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிபோட்டு, அதற்குப்பின் 28 நாட்கள் கழித்தும் மாதிரிகள் பெறப்பட்டன.

இந்த மாதிரிகள் ஒப்பீடு செய்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பு

இதில் கோவேக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்னர் ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாறிய கரோனா வைரஸ்களுக்கு எதிராக நோய் எதிர்ப்புச்சக்தி மேம்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதுபற்றி புனே தேசிய வைராலஜி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி கஜானன் சக்பால் கூறும்போது,

 பி.1 மற்றும் டெல்டா, பீட்டா, ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாறிய வைரஸ்களுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி மேம்பட்டுள்ளது என கூறினார். ஆய்வு முடிவில், கோவேக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்ட பின்னர், ஹோமோலோகஸ் பி.1-வுக்கு எதிராக 19.11 மடங்கு, பிற உருமாறிய கரோனா வைரஸ்களுக்கு எதிராக 16.51 மடங்கு, பீட்டாவுக்கு எதிராக 14.70 மடங்கு, ஒமைக்ரானுக்கு எதிராக 18.33 மடங்கு நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கிறது என கூறப்பட்டுள்ளது.

விரைவுபடுத்த...

இந்த ஆய்வு முடிவுகள், உரு மாறிய கரோனா வகைகளுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்கிறபோது, தொற்றின் தீவிர தாக்குதல், மருத்துவமனை சேர்க்கை, உயிரிழப்பு ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.

No comments:

Post a Comment