உத்தராகண்ட், ஜன.13 மோடி தனது கார்ப்பரேட்டுகளின் கை களுக்கு நூற் றுக்கணக்கானான மலைப்பகுதிகளை நீண்ட காலகுத் தகைக்கு விட்டார்.
அவர்கள் மணல்மேடுகள் நிறைந்த மிகவும் நெகிழ்வான மலைச்சரிவுகளை சமன்செய்ய பெரிய பெரிய கருவிகள் கொண்டு இமயமலையைக் குடைந் தார்கள். விளைவு மலையின் உள் பகுதியில் மென்மையான பகுதிகள் அப்படியே கீழ்நோக்கி செல்ல உத்தரா கண்டின் பெரும்பாலான பகுதிகள் பூமிக்குள் புதைந்துகொண்டே செல் கிறது, மேலும் பல வீடுகளில் புதிதாக விரிசல்கள் ஏற்படுவதும் தொடர் கதை யாகிவிட்டது. இதுவரை பாதிக் கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 1000-ஆக உயர்ந்துள்ளது. அங்கி ருந்து இதுவரை நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நகரின் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. வீட்டை விட்டுச் செல்ல மனமில்லாமல், விரிசல் களைப் பார்த்துக் கொண்டே இருந் தவர்களும் கூட, இனி இங்கு வாழ முடியாது என்பதை உணர்ந்து கொண்டு கனத்த இதயத்தோடு வீட்டை காலி செய்து கொண்டு செல்கிறார்கள்.
ஜோஷிமட்டில் மட்டுமின்றி மேலும் பல மலைநகரங்கள் மண் ணுக்குள் புதையத்துவங்கிவிட்டது, முக்கி யமாக வடகிழக்கு உத்தரா கண்ட் இமயமலைச்சரிவில் தேசிய பாதுகாப்பு அகடாமி மற்றும் ராணு வத்தில் பல முக்கிய தளங்கள் உள்ளன. இவை யும் மண்ணுக்குள் புதையத் துவங்கி விட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு இறுதிக் குள் மொத்தம் 4 நகரங்கள், 19 கிராமங்கள் மண்ணுக் குள் புதைந்துவிடும் என்று சூழியல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதன் மூலம் சுமார் 12 லட்சம் மக்கள் வீடிழந்து நாடோடிகளாக மாறு வார்கள்.
இவ்வளவு நடந்தும் இன்றுவரை மோடியோ அமித்ஷாவோ வாயைத் திறக்கவே இல்லை. 2018 ஆம் ஆண்டு மோடி பிரதான் மந்திரி அவாஜ் யோஜனா(பிரதமர் வீடு திட்டம்) அறிவிப்பின் போது கூறியது, 2022 முடியும் போது இந்தியா வில் வீடில்லாத நபர்கள் யாருமே இருக்கமாட்டார் கள் என்றார். 2022 முடிந்து 2023 பிறந்தால் ஆயிரக் கணக்கானோர் வீடிழந்து நாடோடி களாக பெருநகரங்களைக் நோக்கி புறப்படுகின்றனர்.
மத்தியப்பிரதேசம்
தள்ளுவண்டியில் நோயாளி மனைவியை கொண்டு சென்ற கணவர்
மத்தியப் பிரதேசம் கண்டேல் வால் பகுதியில் உடல் நலிவுற்ற தனது மனை வியை மருத்துவ மனைக்கு கைவண்டி யில் வைத்து அழைத்துச்செல்லும் கணவர். ஆம்புலன்ஸ் குறித்து கேட்ட போது ஒருலட்ச ரூபாய் கேட்கிறார்கள் காலை எழுந்தால் மதிய சாப் பாட்டிற்கு வழியில்லாமல் இருக்கும் எங்களிடம் ஒரு லட்சரூபாய் கொடுக்க முடியுமா என்று சொல் லிக்கொண்டே தள்ளுவண்டியில் தனது மனைவியை படுக்கவைத்து கொண்டு சென்றார்.
குறிப்பு: இரண்டு மாநிலத்திலும் பாஜக ஆட்சி
No comments:
Post a Comment