5.1.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
2017இல் ரூ.85390 கோடி நட்டத்தில் இருந்த பொதுத்துறை வங்கிகள் 2022இல் ரூ. 66539 கோடி லாபம் அடைந்துள்ளன.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்பம் அளிக்காத ஆளுநரை எதிர்த்து போராடி வெற்றி பெறுவோம், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உறுதி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
உத்தரப்பிரதேச மாநில உள்ளாட்சி தேர்தலை பிற்பட்டோர் பிரிவு இட ஒதுக்கீடு இல்லாமல் நடத்தலாம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது
தனது பிரியாவிடை நிகழ்வில், நீதித்துறையில் பாலின சமத்துவமின்மையை உச்ச நீதிமன்ற நீதிபதி நசீர் ஒப்புக்கொண்டார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர விரும்புவோர் இடங்களை நிராகரித்தால் அடுத்த ஆண்டு நீட் தேர்வு எழுத முடியாது. நான்கு சுற்று கவுன்சிலிங்கிற்கு பிறகு காலியாக உள்ள குறைந்தது 2,244 முதுகலை மருத்துவ இடங்கள் வீணாகாமல் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஒன்றிய அரசு முடிவு.
-குடந்தை கருணா
No comments:
Post a Comment