ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 2, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 2.1.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

·       தனது கட்சியின் உட்பூசலை சரி செய்வதன் மூலம், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை ராகுல் காந்தி வலுப்படுத்த முடியும்; செய்வாரா ராகுல்? என்கிறது தலையங்க செய்தி.

·       நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்த மம்தா சபதம்.

தி டெலிகிராப்:

·       அரசியல் நிகழ்ச்சியில் ‘ஜெய் சிறீராம்’ என பாஜகவினர் கூச்சலிடுவது அக்கட்சியின் பொது நிகழ்வில் நடந்து கொள்ளும் போக்கினை வெளிப்படுத்துகிறது என்கிறது தலையங்க செய்தி.

·       சிபிஎம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், கேரளா போன்ற மாநிலங்களில் தேர்தல் ஆதரவைக் கருத்தில் கொண்டு ஆர்எஸ்எஸ்-பாஜக வர்ணிக்கும் சகோதரத்துவம் மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்தின் வலையில்  முஸ்லிம்கள் விழ வேண்டாம்; பாபர் மசூதியை இடிக்கும் பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ்-பாஜக வழிநடத்திய கடந்த காலத்தை மறந்து விட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

 டைம்ஸ் ஆப் இந்தியா:

·       மக்களை மதவாத அடிப்படையில் பிரிக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ் திட்டங்களுக்கு எதிராக மதச்சார்பற்ற குழுக்கள் ஒன்றுபட வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள்.

·       தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் பதவிக்காலம் முடிவடைந்தது. 2021 டிசம்பரில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில அரசால் அமைக்கப்பட்ட தேடல் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து வேட்பாளர்களையும் நிராகரித்த பின்னர் ஒருதலைப்பட்சமாக அவரது பதவிக் காலத்தை ஓராண் டுக்கு நீட்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment