சி.பி.எம். தீர்மானம்
சென்னை, ஜன.5- ஈஷா மய்யத்திற்கு யோகா பயிற்சிக்கு சென்ற பெண் சுபசிறீ மர்மமான முறையில் மரண மடைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ள நிலையில், ஈஷா மய்யத்தை பூட்டி சீல் வைத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட் டம் ஜனவரி 2 அன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: கோவை, வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மய்யத்திற்கு பயிற்சிக்கு சென்ற திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளி சுபசிறீ என்பவர் வீடு திரும்பாமல் சடலமாக மீட்டெடுக்கப்பட் டுள்ளது தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சி யையும், கொந்தளிப்பை யும் ஏற்படுத்தியுள்ளது. ஈஷா யோகா மய்யத்திற்கு டிசம்பர் 11 ஆம் தேதியன்று ஒருவார கால பயிற்சிக்கு சுபசிறீ சென்றுள்ளார். அதன்பிறகு பயிற்சி முடிந்து வீடு திரும்பாத நிலையில் அவரது கணவர் தேடிச் சென்றும் கிடைக் காததால் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் மீது மேற்கொண்ட விசார ணையில் சுபசிறீ தனது பொருட்கள் எதையும் எடுக்காமல் சாலையில் பதற்றத்துடன் ஓடிச் செல்லும் காட்சி சி.சி.டி.வியில் பதிவாகியுள் ளது. இந்நிலையில் 31.12.2022 அன்று ஈஷா யோகா மய்யத்திற்கு அருகில் உள்ள கிணற் றில் சுபசிறீ சடலம் மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவசர, அவசரமாக உடற் கூராய்வு செய்து சுபசிறீயின் உடலை காவல் துறையினர் எரித்துள்ளதும் பல்வேறு சந் தேகங்களை எழுப்பியுள்ளது.
ஈஷா யோகா மய்யத்தின் மீது அடுக்கடுக்கான பல புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நில ஆக்கிர மிப்பு, பழங்குடியின மக்களை வெளியேற்றுதல், வன விலங்குகளை வேட்டையாடு வது, பெண்கள் - சிறுமிகளை அடைத்து வைத்து போதைப் பழக்கத்திற்கு உட்படுத்துவது, உரிய அனுமதி யின்றி வெளிநாட்டினர் வந்து செல்வது உள்ளிட்டு பல்வேறு புகார்கள் ஈஷா யோகா மய்யத்தின் மீது குவிந்த வண்ணம் உள்ளன. மகா சிவராத்திரி விழா வில் பிரதமர் மோடி கலந்து கொண் டதை தனக்குச் சாதகமாக பயன்படுத்தி ஜக்கி வாசுதேவ் அனைத்து வித மான சட்டவரம்பு களையும் மீறி செயல்பட்டுக் கொண் டுள்ளார். தொடர்ந்து ஒன்றிய அமைச்சர்கள், பாஜக முக்கிய தலைவர்கள் ஈஷா மய்யத் திற்கு வந்து செல்வதால் காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் எந்தவித நடவடிக் கையும் மேற்கொள்ளாமலும் கண்டும் காணாமலும் இருக்கும் போக்கே உள்ளன. இதன் விளைவே தற் போது சுபசிறீயின் மரணம் ஏற் பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, தமிழ்நாடு அரசு சுபசிறீயின் மரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு இந்நிகழ்வு குறித்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். தொடர்ந்து ஈஷா மய்யத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வரம்பு மீறிய நடவடிக்கைகள் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடு வதுடன் தவறிழைத்த வர்கள் யாராக இருந்தாலும் அனைவ ரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை முடியும் வரை ஈஷா யோகா மய்யத்தை பூட்டி சீல் வைத்து அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment