இலக்கியத்தில் - தை மாதத்தின் சிறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 14, 2023

இலக்கியத்தில் - தை மாதத்தின் சிறப்பு

பொங்கல் விழா நாளையே தமிழர்கள் புத்தாண்டுத் தொடக்கமாகப் பல்லாண்டுக் காலமாகக் கொண்டாடி வந்துள்ளனர் என்பதற்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கழக இலக்கியங்களில் சான்றுகள் உள.

“தைத் திங்கள் தண்கயம் படியும்”  - நற்றிணை

“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” - குறுந்தொகை

“தைஇத் திங்கள் தண்கயம் போல்” - புறநானூறு

“தைஇத் திங்கள் தண்கயம் போல” - அய்ங்குறுநூறு

“தையல் நீராடி தவம் தலைப்படுவாயோ” - கலித்தொகை

தமிழ்ப் புத்தாண்டைப் பற்றிய குறிப்புகள் - மு.மணிவெள்ளையன்

தீய்ந்த தீபாவளி வந்தாலென்ன? காய்ந்த கார்த்திகை வந்தாலென்ன? மகாராசன் பொங்கல் வரவேண்டும் என்பது நாட்டுப் புற நடைமுறை மொழிவழக்கு.

பண்டைத் தமிழர் பொங்கல் விழா கொண்டாடும் வெற்றியைப் பற்றிப் புற நானூற்றிலே ஒரு பாடல் உண்டு. தொன்மையுடைய பொங்கலைப் பற்றிக் கருவூர் கந்தப் பிள்ளை சாத்தனார் என்ற புலவர் பாடியுள்ளார். பாடல்: 168.

தைப் பிறந்தால் வழி பிறக்கும் - தை மழை நெய் மழை - என்பன போன்ற பழமொழிகள் தமிழர் புத்தாண்டு வரவேற்பை உறுதிப்படுத்துவனவாகும்.


No comments:

Post a Comment