சென்னை, ஜன. 14- சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகரில் 40 வகை யான கலைகளுடன் “சென்னை சங்க மம் - நம்ம ஊரு திருவிழா”வை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வெள்ளிக்கிழமை (ஜன.13) தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி: தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.1.2023) சென்னை, தீவுத் திடலில், தமிழ் மண்ணின் கலைக ளைக் களிப் போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் 40 வகையான கலைகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்தப்படும் “சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா”-வை தொடங்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார் வையிட்டார். சென்னை மாநகரில், தீவுத்திடல், கொளத்தூர் - மாநகராட்சி விளையாட்டு மைதானம், பெரம்பூர் (தெற்கு) முரசொலி மாறன் மேம்பாலப் பூங்கா, ராயபுரம் - ராபின்சன் விளை யாட்டு மைதானம், மயிலாப்பூர் - நாகஸ்வர ராவ் பூங்கா, செம்மொழிப் பூங்கா, நுங்கம்பாக்கம் - மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம், சிந்தாதிரிப்பேட்டை --_ மாநகராட்சி விளையாட்டு மைதா னம், தியாகராயர் நகர் நடேசன் பூங்கா எதிரிலுள்ள மாநகராட்சி மைதானம், பெசன்ட் நகர் - எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சைதாப் பேட்டை - மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதா னம், கலைஞர் கருணாநிதி நகர் - சிவன் பூங்கா, வளசரவாக்கம் - இராம கிருஷ்ணா நகர் விளையாட்டு மைதானம், அண்ணா நகர் - கோபுரப் பூங்கா, கோயம்பேடு - ஜெய்நகர் பூங்கா, அம்பத்தூர் - எஸ்.வி. விளை யாட்டு மைதானம், எழும்பூர் - அரசு அருட்காட்சியகம் ஆகிய 18 இடங் களில் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா ஜன.14 முதல் ஜன.17 வரை மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்.
சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவில், நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், புரவி யாட்டம், காவடியாட்டம், புலியாட் டம், தோடர் நடனம், மயிலாட்டம், சிலம்பாட்டம், வில்லுப் பாட்டு, நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளிட்ட 40 வகையான கலைகளு டன் கலை நிகழ்ச்சிகள் நடை பெறும்.இந்த விழா வில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலத் துறை மற்றும் கால்நடை பராம ரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பிற்படுத்தப் பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சுற்று லாத் துறை அமைச்சர் கா.ராமச் சந்திரன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், பெரு நகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனி மொழி, ஆர். கிரிராஜன், சட்டமன்ற உறுப்பி னர்கள் எழிலன், ஆ.தமிழரசி, துணை மேயர் மு.மகேஷ் குமார், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திர சேகர், தலைமைச் செயலா ளர் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், சுற்று லாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் எஸ்.ஆர். காந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment