உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி சகோதரர் டாக்டர் தியாகராசன் மறைவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 17, 2023

உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி சகோதரர் டாக்டர் தியாகராசன் மறைவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி யின் சகோதரர் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து  அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:

"உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களின் தம்பியான மருத்துவர் தியாகராஜன் (65) அவர்கள் மறைவெய் தினார் என்ற செய்தியால் மிகவும் வேதனையுற்றேன்.

உடன்பிறந்த தம்பியை இழந்து தவிக்கும் பொன்முடி அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் கூறிக்கொண்டு அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்." என முதலமைச்சர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment