வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் தமிழர் திருநாள் சிறப்புக் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 23, 2023

வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் தமிழர் திருநாள் சிறப்புக் கருத்தரங்கம்

கடலூர் மாவட்ட கழக சார்பில் பேராசிரியர் அரசு செல்லையாவுக்கு பெரியார் விருது!

கடலூர், ஜன. 23- கடலூர் மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் வடக்குத்து திராவிடர் கழகம் சார்பில் தமிழர் திருநாள் விழா சிறப்பு கருத்தரங்கம் 8.1.2023 அன்று மாலை 5 மணி அளவில் ஒன்றிய கழக தலைவர் கனகராசு தலைமையில் மாவட்ட தலைவர் தண்டபாணி முன்னிலையில் நடந்தது.

 மாவட்ட அமைப்பாளர் மணி வேல் வரவேற்புரை ஆற்றினார். கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தமிழர் திருநாள் சிறப்பு குறித்து சிறப்புரை ஆற் றினார். அமெரிக்காவிலிருந்து வருகை தந்த பேராசிரியர் அரசு செல்லையா சூழலியல் குறித்து சிறப்பு பொழிவு ஆற்றி னார். அவருக்கு மாவட்ட கழக சார்பில் பெரியார் விருதினை கழகப் பொதுச் செயலாளர் அளித்து மகிழ்ந்தார். நிகழ்வில் திமுக தர்மலிங்கம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக பெரியார் செல்வம், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் முனி யம்மாள், மகளிர் அணி நிர்வா கிகள் சத்தியா, குணசுந்தரி, தமிழேந்தி, திராவிடன், மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் ராமநாதன், வடலூர் திரா விடர் கழகத் தலைவர் புலவர் ராவணன், கிளை கழக தலை வர் தங்க பாஸ்கர், பெரியார் வீர விளையாட்டு கழக மாணிக் கவேல், இளைஞர் அணி நிர் வாகிகள் உதயசங்கர், வேலு ஆகியோர் கலந்து கொண்ட னர்.

முன்னதாக கழக மகளிர் அணி தோழர்கள் புதுப்பானை புத்தரிசி பொங்கல் வைத்து செங்கரும்பும் மஞ்சள் கொத் தும் எழில் ஊட்ட பொங்கலோ பொங்கல் என்று பொங்கல் வைத்தனர் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. முடிவில் நூல கர் கண்ணன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment