சூரத், ஜன. 13- தாத்ரா-நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில், 9 வயது சிறுவனை கடத்தி கழுத்தை அறுத்து நரபலி கொடுத்த வழக்கில், ஒரு சிறுவன் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அருகே உள்ள யூனியன் பிரதேசமான தாத்ரா - நாகர் ஹவேலியின் சாயிலி கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் கடந்த மாதம் 29ஆம் தேதி காணாமல் போனான். சில்வாசா காவல்துறை வழக்குப் பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில், சில்வாசாவில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தின் வாபி என்ற இடத்தில் தலை இன்றி சிறுவன் உடல் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது. காணாமல் போன சிறுவனின் அடையா ளத்துடன் அந்த உடல் ஒத்துப்போனதால், காவல்துறையினர் விசார ணையை தீவிரப்படுத்தினர். அதே நேரத்தில் சிறுவனின் சொந்த ஊரான் சாயிலி கிராமத்தில் துண்டு துண்டாக வெட்டப் பட்ட மனித உடல் பாகங்கள் கிடைத்தன. அவற்றை உடற் கூராய்வு பரிசோதனைக்கு காவல்துறைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு விசாரணையில், தாந்த்ரா- நாகர் ஹவேலியில் கோழிக் கடையில் கறி வெட்டும் வேலை செய்யும் சிறுவனை காவல் துறையினர் கைது செய்தனர். அச்சிறுவன் கொடுத்த தகவலின் அடிப் படையில், சைலேஷ் கொக்கேரா மற்றும் ரமேஷ் சன்வார் என்ற இருவரை காவலர்கள்கைது செய்தனர்
இவர்கள் மூவரும் நிறைய பணம் கிடைக்கும் என்ற மூட நம்பிக்கையில் சிறுவனை கடத்தி, சாயில் கிராமத்தில் வைத்து தலையை வெட்டி நரபலி கொடுத்தது விசாரனையில் தெரியவந்தது பின், உடலை வாபியில் உள்ள கால்வாயில் வீசி எறிந்ததை ஒப்புக் கொண்டனர். கைதான சிறுவனை, சிறார் காப்பகத்தில்வைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment