டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
நாடாளுமன்றத்தைவிட அரசமைப்புச் சட்டமே மேலானது என்கிறது தலையங்க செய்தி.
தி டெலிகிராப்:
கேரளாவில் வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி தோட்டத்தில் ராதாகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 1,001 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்போ கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. ராதாகிருஷ்ணனின் கூற்றுப்படி, வைக்கம் சத்தியாகிரகத்தின் (1924-1925) நேரத்தில் "இந்து ஒற்றுமை"யின் பங்கை வலியுறுத்துவது யோசனையாகும்.
ஆர்.எஸ்.எஸ். மட்டுமே இந்து நலன்களின் பாதுகாவலர் என்றும், அதன் அரசியல் பிரிவான பி.ஜே.பி. இந்திய அரசியலில் இந்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத் துகிறது என்றும் தவறான கருத்தைத் தகர்த்தெறியும் திட்டத்தில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில், தொற்றுநோய்க்குப் பிறகு அனைத்து அரசாங்க நடவடிக்கைகளும் மீண்டும் தொடங்கப் பட்டாலும், தரவு சேகரிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அது விரைவில் துவங்கப்பட வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஒரே நாடு: ஒரே கருத்துக் கணிப்புக்கு தனது கட்சியின் கடும் எதிர்ப்பை அதிகாரப்பூர்வமாக சட்ட ஆணையத்திடம் தெரிவித்துள்ளார்.
தி இந்து:
176ஆவது பிரிவின் கீழ் ஒரு மாநில ஆளுநர் படிக்கும் உரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மட்டுமே உள்ளன, எனவே சில பகுதிகளை வேண்டுமென்றே படிக்காமல் இருப்பது மேற்கூறிய பிரிவுக்கு எதிரானது என மக்களவை மேனாள் செயலர் பி.டி.டி.ஆசாரி தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய வேலைவாய்ப்பு வளர்ச்சி 2023இல் 1% மட்டுமே இருக்கும் என்று அறிக்கை கணித்துள்ளது, 2022 இல் பாதி அளவை விட குறைவாக இருக்கும் என பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment