அண்மையில் மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர்
இ.திருமகன் ஈவெரா அவர்களின் படத்திற்கு, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி, துணைத் தலைவர் கவிஞர்
கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் மாலையிட்டு இறுதி மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் மூத்த தலைவரும் திருமகன் ஈவெரா அவர்களின் தந்தையுமான ஈ.வெ.கி.ச.இளங்கோவன்,
ஈ.வெ.கி.ச.அன்பு, சஞ்சய் மற்றும் குடும்பத்தினருக்கு கழகத் தலைவர் ஆறுதல் தெரிவித்தார். உடன் திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளர்கள் இருந்தனர். (சென்னை, 12.01.2023)
No comments:
Post a Comment