ஒன்றிய அரசை ஆளும் கட்சியின் ஒரு மாநிலத் தலைவரின் அராஜக உளறல்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 5, 2023

ஒன்றிய அரசை ஆளும் கட்சியின் ஒரு மாநிலத் தலைவரின் அராஜக உளறல்கள்!

சென்னை, ஜன.5 பாஜக மாநிலத் தலைவர் கே அண்ணாமலை நிதானம் இழந்து ஊடகவியலா ளர்களிடம் அருவருக்கத்தக்க முறையில் நடந்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 பாஜக தமிழ்நாடு தலைமை நிலையத்தில் ஊடகவியலாளர் களிடம் பேசிய பாஜக தலைவர் கேள்விகளுக்கு பதிலளிக்க முடி யாமல் கோபப்பட்டு, "நீங்கள் அனைவரும் தமிழ்நாடு அரசு செய்தித்துறை தரும் பணத்திற்காக பேசுகிறீர்கள்" என்று கூறினார். மேலும் அவர்களின் கேள்வி களையே எங்களிடம் வைக்கிறீர் கள் என்று உளறிக்கொட்ட ஆரம்பித்துவிட்டார்

  ஊடகவியலாளர் சந்திப்பு துவங்கியதும் காயத்திரி ரகுரா மின் பாலியல் காட்சிப் பதிவு மற்றும் ஒலிப்பதிவு குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது; உடனே கோபம் கொண்ட அவர் கேள்வி கேட்ட ஊடகவியலாள ரிடம் நீங்கள் எந்த ஊடகம், திட்ட மிட்டு இங்கு வந்துள்ளீர்கள் என்றார். 

மேலும் பெண்கள் மூலம் தகவல்களையும் மிரட்டி அடி பணியவைக்கும் ’ஹானி டிராப்’ முறை குறித்து கேள்வி எழுப் பப்பட்டதும், மேலும் கட்சியில் உள்ளேயே இவ்வாறு நடக்கிறதே என்று ஊடகவியலாளர்கள் கேட்டனர். இதற்கு அண்ணா மலை நிதானம் தவறி நீங்கள் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்ப முடியுமா, அமைச்சர்களி டம் கேள்வி எழுப்பமுடியுமா? பெண் காவலர் மீது தவறாக நடக்க முயன்றனர் அது குறித்து கேள்வி எழுப்பமுடியுமா என்று பேசிகொண்டே இருந்தார். 

மேலும் அரசின் செய்தி வெளி யீட்டுத்துறை பெரிய அளவில் உங்களுக்குப் பணம் தருகிறது, என்று போகிறபோக்கில் பேசினார்.

இது தொடர்பாக சான்று களைத் தாருங்கள் என்று ஊடக வியலாளர்கள் கேட்ட போது, என் னிடம் சில பாலியல்காட்சிப் பதிவுகள் உள்ளன ஆளும் கட்சி அமைச்சர் ஒருவரின் காட்சிப் பதிவும் உள்ளது, தனியாக வாருங்கள் தருகிறேன் என்று உளறிக் கொட் டினார். அதன் பிறகு இன்னும் இரண்டு நாட்களில் அனைத்து ஆதாரங்களையும் தருவேன் என்று கூறிய அவர் அரசின் செய்தி வெளியீட்டுத்துறைக்கும் உங்களுக்கும் உள்ள ’டீலிங்’ குறித்த சான்றுகள் என்னிடம் உள்ளன என்றும் கூறிவிட்டு. திமுக தலைவர்களிடம் கேள்வி எழுப்ப துணிவில்லாதவர்கள் என்று கூறி இங்கு வரும்போதே ஏதோ திட்டத்தோடு வருகிறீர்கள் என்று கோபத்தோடு கத்தினார்


No comments:

Post a Comment