"அதானி -அம்பானியால் எனது சகோதரரை விலைக்கு வாங்க முடியாது" பிரியங்கா காந்தி எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 5, 2023

"அதானி -அம்பானியால் எனது சகோதரரை விலைக்கு வாங்க முடியாது" பிரியங்கா காந்தி எச்சரிக்கை

புதுடில்லி,ஜன.5- காங்கிரஸ் கட்சி யின் மேனாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்று திரட்டும் முயற்சியாக ஒற் றுமை பயணத்தை மேற்கொண் டுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 

7 ஆம் தேதி தமிழ்நாட்டில் கன்னி யாகுமரியில் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களால் தொடங்கிவைக்கப்பட்ட இப்பயணம் தமிழ்நாடு, கேரளா, கருநாடகா, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங் களைக் கடந்து டிச. 24 இல் டில் லியை அடைந்தது.

9 நாள் ஓய்வுக்குப் பிறகு ராகு லின் நடைப்பயணம் மீண்டும் நேற்று (3.1.2023) மீண்டும் தொடங் கியது.  காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேச மாநில எல்லையில் ராகுல் காந்தி யின் பயணத்தை வரவேற்று பேசு கையில், “எனது சகோதரர் ஒரு போராளி. அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவர் இதுவரை 3,000 கி.மீ. தொலைவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கவுதம் அதானி, அம்பானி சில தலைவர்களையும் ஊடகங்களை யும் விலைக்கு வாங்கியிருக்கலாம். ஆனால், அவர்களால் எனது சகோ தரரை விலைக்கு வாங்க முடியாது.

வெறுப்பு அரசியல், பிரிவினை அரசியல் எந்த பலனையும் கொடுக்காது. வேலையின்மைக்கு தீர்வு காண்பதிலும், பொருளாதார முன்னேற்றத்திலும் மோடி அரசு கவனம் செலுத்தட்டும். எனது சகோதரருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த ஆட்சியாளர்கள் பல விதங்களில் முயன்று வருகின்றனர். எனது சகோதரர் உண்மையை மட்டுமே பேசுகிறார். சரியான பாதையில் செல்கிறார். அவரை உங்களால் ஒன்றும் செய்ய முடி யாது. இந்தப் பயணத்தில் பங்கேற் கும் அனைவரும் ஒற்றுமை, அன்பு, மரியாதை ஆகியவற்றை மக்க ளிடம் எடுத்துச் செல்லுங்கள்.

நாட்டை ஒற்றுமைப்படுத்த ராகுல் மேற்கொண்டுள்ள ஒற் றுமை பயணம் வெற்றிப் பயணமாக அமையட்டும். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றும் கடினமான காரியம் இல்லைÓ என்றார்.

No comments:

Post a Comment