மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் வசந்தம் ஸ்டீல்சில் மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி தலைமையில் 7.1.2023 அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.
மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் கூட்டத்தை எழுச்சியோடு நடத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கி உரையாற்றினார்.
கூட்டத்தில் மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன், நகர செயலாளர் வெ.சந்திரன், நகர தலைவர் கே.அர.பழனிச்சாமி, காரமடை ஒன்றிய தலைவர் அ.மு.ராஜா மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் நா.பிரதிப், குட்டைபுதூர் நாராயணன், உத்திரிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தீர்மானம் 1:
பிப்ரவரி 5ஆம் தேதி காரமடையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் சமூக நீதி பாதுகாப்பு - ‘திராவிட மாடல்’ விளக்கப் பொதுக்கூட்டத்தை எழுச்சியோடு நடத்துவது என இக்கூட்டம் முடிவு செய்கிறது.
தீர்மானம் 2:
காரமடை பொதுக்கூட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சுவரெழுத்துப் பணி , துண்டறிக்கை, கடைவீதி வசூல் என அனைத்து வகையிலும் நன்றாக விளம்பரம் செய்வது என முடிவு செய்யப்படுகிறது..
தீர்மானம் 3:
தமிழ்நாடு என்பதை ‘தமிழகம்‘ என அழைக்கவேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதற்கு இக்கூட்டம் கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவை - பொள்ளாச்சி
கூட்டத்தில் கோவை மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர், மாவட்ட செயலாளர் தி.க.செந்தில் நாதன், திருப்பூர் மாவட்ட செயலாளர் யாழ் ஆறுச்சாமி, மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் பொறியாளர் தி பரமசிவம், மாவட்ட துணைத் தலைவர் சி.மாரிமுத்து, மாவட்ட தொழிலாளரணி தலைவர் சு.ஆனந்தசாமி, செயலாளர் ஆர்,வெங்கடாசலம், பொள்ளாச்சி நகர தலைவர் க.வீரமலை, நகர செயலாளர் ர.நாகராஜ், துணைத் தலைவர் அ.ரவிச்சந்திரன், ஜெ.செழியன், பொள்ளாச்சி, ம.பிரவின் குமார், சி.காதர்அலி (விசிக), பொள்ளாச்சி கி.சிவராஜ், முருகானந்தம், மு.வர்சினி, வேட்டைக்காரன் புதூர், கு.கார்த்தி , கோவை பெரியார் புத்தக நிலைய பொறுப்பாளர் அ.மு.ராஜா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தீர்மானம் 1:
தந்தை பெரியாரின் கொள்ளுப் பேரனும், காங்கிரஸ் இயக்க முன்னணி தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர் களின் மகனும், ஈரோடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி உறுப் பினருமான திருமகன் ஈவெரா மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2:
தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் மேற் கொள்ளும் சமூக நீதிப்பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரைப் பயண பொதுகூட்டடத்தை 6.2 2022 அன்று பொள்ளாச்சியில் மிக எழுச்சியோடு நடத்துவது என இக்கூட்டம் முடிவு செய்கிறது. பொள்ளாச்சிக்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற் பளிப்பது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது
தீர்மானம் 3:
பொதுக்கூட்டத்தை விளக்கி தெருமுனைக் கூட்டம், சுவரெழுத்து, கடைவீதி வசூல் என அனைத்து விளம்பரங் களையும் கழகத் தோழர்கள் இணைந்து சிறப்பாக செய்வ தென முடிவு செய்கிறது.
தீர்மானம் 4:
ஆசிரியர் அய்யாவின் ஆயுளை நீட்டிக்கும் விடுதலை சந்தாவை அதிகளவில் சேகரித்துத் தருவது என இக்கூட்டம் முடிவு செய்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோபி செட்டிப்பாளையம்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் சமூகநீதி பாதுகாப்பு - ‘திராவிட மாடல்’ விளக்கப் பொதுக்கூட்ட ஏற்பாடு குறித்து கோபி சீனிவாசன் இல்லத்தில் 8-1-2023 அன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட கழக பொறுப் பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம் முன்னிலையில் நடைபெற்றது.மாவட்டத் தலைவர் ந.சிவலிங்கம், மாவட்ட காப்பாளர் இரா.சீனிவாசன், மண்டல செயலாளர் பெ.இராசமாணிக்ம், ஒன்றிய செயலாளர் கே.எம்.சிவக்குமார், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மா.சூர்யா, மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் குப்புசாமி, ஆசிரியரணி துணைத் தலைவர் பழனிச்சாமி, கோபி சீனு.மதிவாணன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்கள்.
கோபி.பெ.இராசமாணிக்கம்
ரூ10,000 நன்கொடை
பிப்ரவரி - 4 கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் சமூகநீதி பாதுகாப்பு பரப்புரை பயணப் பொதுக்கூட்ட அழைப்பிதழ் செலவிற்காக ஈரோடு மண்டல செயலாளர் பெ.இராச மாணிக்கம் ரூ10,000 நன்தொடையாக வழங்கினார்.
தீர்மானங்கள்:
1. எதிர்வரும் பிப்ரவரி 4ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொள்ளும் தமிழ்நாடு தழுவிய சமூகநீதி பாதுகாப்பு, ‘திராவிட மாடல்’ விளக்கப் பரப்பரை பயண வரவேற்பு பொதுக்கூட்டத்தை கோபிசெட்டி பாளையத்தில் மிகச் சிறப்பாக நடத்துவது என முடிவெடுக்கப் படுகிறது. கூட்டத்திற்கு வரும் தமிழர் தலைவர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டுமென்று முடிவு செய்யப்படுகிறது.
பொறுப்பாளர்கள் நியமனம்:
கோபி நகரத் தலைவர் - ஆனந்தராஜ்
கோபி நகர செயலாளர் - க.அருண்குமார்
கோபி நகர அமைப்பாளர் - சீனு.மதிவாணன்
கோபி ஒன்றிய தலைவர் - கருப்புசாமி
கோபி ஒன்றிய செயலாளர் - கே.எம்.சிவக்குமார்
கோபி ஒன்றிய அமைப்பாளர் - எழில்.இராமலிங்கம்
நாமக்கல்
பிப்ரவரி 3ஆம் தேதி ப.குமாரபாளையத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க தொடர் பரப்புரை பயண பொதுக்கூட்ட ஏற்பாடு குறித்து - பொத்தனூர் பெரியார் படிப்பகத்தில் 8-1-2023 அன்று பகல் 12 மணிக்கு நாமக்கல் மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் பெரியார் சுயமரியாதை பிரச்சர நிறுவன தலைவர் பொத்தனூர் க.சண்முகம் தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் அ.கு.குமார் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பெரியசாமி, மாவட்ட துணைத்தலைவர் பொன்னுசாமி ,வென்னந்தூர் செல்வக்குமார், மாவட்ட ப.க தலைவர் வழக்குரைஞர் இளங்கோ, குமாரபாளையம் நகரத் தலைவர் சரவணன், ஈரோடு மாவட்டத் தலைவர் சிற்றசு, பள்ளிப்பாளையம் சீனிவாசன், சந்தேஷ், மாவட்ட ப.க செயலாளர் வீரமுருகன், மாவட்ட கழக துணைத்தலைவர் அசைன், பரமத்தி செங்கோடன், பொத்தனூர் மருது, அறிவாயுதம் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்கள்
நன்கொடையளித்தோர்
பொத்தனூர் க.சண்முகம் ரூ. 5000
நாமக்கல் பெரியசாமி-ரூ. 5000
பொத்தனூர் அசைன் - ரூ. 2000
பாமத்தி செங்கோடன் - ரூ.1000
பள்ளிபாளையம் சீனிவாசன் ரூ. 500
தீர்மானங்கள்
1. இரங்கல் தீர்மானம்:
தந்தை பெரியாரின் கொள்ளுப் பேரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னணித் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங் கோவன் அவர்களது மகன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை இக்கமிட்டி தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 2:
எதிர்வரும் 3.2.2023 அன்று சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரைப் பயண கூட்டத்திற்கு ப.குமார பாளையம் வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பளிப்பது நடைபெறும் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது என்றும் முடிவெடுக்கப் பட்டது.
No comments:
Post a Comment