வாரணாசி, ஜன. 5- பதவி விலகிய உடனே விஷ்வ ஹிந்து பரிஷத் காசி தலைவராகப் பொறுப் பேற்ற அய்பிஎஸ் அதி காரி இளைஞர்களி டம் ஹிந்து கலாச்சாரத்தின் அருமை பெருமைகளை மீண்டும் கொண்டு செல் லும் கடமையைச் செய்ய நல்வாய்ப்பு என்று கூறி னார்
உத்தரப் பிரதேசத்தில் காவல்துறை தலைவராக பதவியேற்று பணி ஓய்வு பெற்ற கவிந்தர பிரதாப் சிங் உடனடியாக விசுவ ஹிந்து பரிஷத் காசி பிரி வில் தலைவராக பதவி யேற்றார். பதவி ஏற்பில் பேசிய அவர், ”நமது இளைஞர்கள் ஹிந்து கலாச்சாரங்களை மெல்ல மெல்ல மறந்து வருகின்றனர். இதனால் அவர்களின் நடவடிக்கைகள் மோச மானதாக அமைந்து கொண்டு வருகிறது. ஹிந்து கலாச்சாரத்தை மறக்கிறார்கள் என்றால் அவர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தை கடைப் பிடிக்கிறார்கள் அது நமக்கானது அல்ல, மேற் கத்திய கலாச்சாரம் நம்மை குருடர்களாக்கி விடுகிறது. சனாதத்தின் முக்கியத்துவத்தை நமது மூளைக்குள் செல்ல விடாமல் தடுத்துவிடு கிறது. நான் இனி அனைத்து ஹிந்துக்களின் வீடுகளிலும் மீண்டும் நமது ஹிந்து கலாச்சா ரத்தை கொண்டு செல்ல பாடுபடுவேன். இதற் கான எனது உடல் ஆவி அனைத்தையும் அர்ப்பணிப்பேன்" என்று கூறினார்.
கடந்த ஆண்டு நடந்த கோடிகளை வெல்லப் போவது யார் என்ற அமிதாப் பச்சனின் கேள்வி - பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் உலக அதிசயங்கள் இந்தி யாவில் எத்தனை இருக் கிறது என்ற சாதாரண கேள்விக்குக்கூட பதில் அளிக்க முடியாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment