புதுடில்லி, ஜன.13 இந்தி யாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் அடுத்த நிதி யாண்டில் குறையும் என தெரிவித்துள்ளது, உலக வங்கி.இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதியாண்டில், இந்தி யாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலை யில், அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 6.6 சதவீதமாக வேகம் குறையும்.
இருப்பினும், உலகளவில் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட ஏழு வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள் ளது என்பது குறிப்பிடத் தக்கது.நடப்பு நிதியாண்டில், இந்தியா 6.9 சதவீத வளர்ச் சியை காணும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதற்கு முந்தைய ஆண்டில் வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது. 2024_2025 நிதியாண்டில் வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
உலக பொருளாதாரத்தில் இந்தியா பிரகாசமாக இருக்கிறதாம்
பிரதமர் மோடி திரிபுவாதம்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பன்னாட்டு முத லீட்டாளர்களின் 7-வது மாநாட்டை பிரதமர் நரேந் திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அப் போது பிரதமர் மோடி பேசிய தாவது:
இந்தியா 2014 முதல் சீர்திருத்தம், வெளிப்பாடு சிறப்பான செயல்பாட்டின் பாதையில் உள்ளது. இதன் விளைவாக இந்தியா முதலீட் டிற்கான கவர்ச்சிகரமான இடமாக மாறியுள்ளது. உலக பொருளாதாரத்தில் பன் னாட்டு நாணய நிதியம் இந்தியாவை வெளிச்சமான இடத்தில் வைத்துள்ளது. உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியை சமாளிப்பதில் இந்தியா நல்ல நிலையில் உள் ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வலிமை யான மேக்ரோ பொருளாதார அடிப்படை களே இதற்கு காரணம். கடந்த 8 ஆண்டு களில் முதலீட் டிற்கான வழிமுறைகளை துரிதப் படுத்தி, பல்வேறு தடைகளை இந்த அரசு நீக்கியுள்ளது. மிகவும் முக்கியமான பாது காப்பு, சுரங்கம், விண் வெளி துறைகளில் தனியாருக்கு வாய்ப்புகளை வழங்கியுள் ளோம் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment