துணை ராணுவத்தில் சேர விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 11, 2023

துணை ராணுவத்தில் சேர விண்ணப்பிக்கலாம்


 துணை ராணுவத்தில் ஒன்றான அசாம் ரைபிள்ஸ் படையில் காலியிடங்களுக்கு  அறிவிப்பு வெளியாகி யுள்ளது. 

காலியிடம் : ரைபிள்மேன் பதவியில் ஜி.டி., 81, வாரன்ட் ஆபிசர் 1, ஹவில்தார் கிளார்க் 1, டிராப்ட்ஸ்மேன் 1, குக் 4 உட்பட 95 இடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு, சில பதவிகளுக்கு தட்டச்சுப்பயிற்சி, இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பு தேவைப்படுகிறது. 

வயது : 1.1.2023 அடிப்படையில் ரைபிள்மேன் ஜி.டி., கிளார்க், வாரன்ட் ஆபிசர், டிராப்ட்ஸ்மேன் பதவிக்கு 18 - 25, மற்ற பதவிகளுக்கு 18 - 23 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை. 

விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி : 

DIRECTORATE GENERAL ASSAM, RIFLES (RECRUITMENT BRANCH), LAITKOR, SHILLONG, 

MEGHALAYA - 793010.

கடைசி நாள் : 22.1.2023

விவரங்களுக்கு :http://assamrifles.gov.in

No comments:

Post a Comment