- நடிகவேள் எம்.ஆர்.ராதா
பொங்கல். திராவிடர் திருநாள். ஆம். உழைத்த உழைப்பின் பயனைக் கண்டு குதூகலிக்கும் நன்னாள். தன்னுடன் ஒத்துழைத்த மாடுகளுக்கும் மாலையணிவித்து நன்றி காட்டி மகிழும் நாள்.
பானையில் பொங்கி - அதைக் கண்டு மனதில் மகிழ்ச்சி பொங்கிய நாள்கள் மறைந்துவிட்டன. இனி வரும் நாள்களிலே அதை நாம் எதிர்பார்க்கிறோம்.
பொங்குவதற்குப் பானையும் - அதில் போட - அரிசியும் இல்லாத நிலையில் எத்தனையோ ஏழைகள் தவித்து தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். நெற்களஞ்சியம் - தஞ்சையைக் கொண்ட தமிழ்நாடு தவிக்கிறது. சோழ வளநாடு - சோறுடைத்து என்ற சிறப்புப் பெற்ற தமிழ்நாடுதான் தானியத்திற்கு அன்னியன் தயவை நோக்குகிறது.
இன்று உழைப்பின் பலனைக்கண்டு மகிழ முடியவில்லை. உழைப்புக்குத் தகுந்த பலனில்லையே என்று ஏங்கும் நாளில் பொங்கல் வந்திருக்கிறது. இனிவரும் பொங்கலிலாவது உழுவோர்கள் உயர்வு பெற்று வறுமை ஒழிக்கப் பெற்று மகிழ்வார்கள் என்று நம்புகிறேன்.
No comments:
Post a Comment