புனே, ஜன.1 அமெரிக்காவின் நியூயார்க்கில் கரோனா அதிகரிப்புக்கு காரணமான ஒமிக்ரான் எக்ஸ்பிபி.1.5 தொற்று குஜராத்தில் ஒருவருக்கு கண்டறிப்பட்டுள்ளது. இதனால் அண்டை மாநிலமான மகாராட்டிரா, தீவிர தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்துகிறது.
கரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருக்கிறது. ஒமிக்ரானின் இரண்டு வெவ்வேறான பிஏ.2 துணைப் பிரிவுகளின் இனக்கலப்புதான் எக்ஸ்பிபி வகைதொற்று . இதன் வழித்தோன்றல் தான் எக்ஸ்பிபி.1.5 வகை. இதன் பரவல் வேகம் அதிகமாக உள்ளது என அமெரிக்க விஞ்ஞானி எரிக் டோபோல் கூறியுள்ளார்.
குஜராத்தில் ஒருவருக்கு எக்ஸ்பிபி.1.5 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அண்டை மாநிலமான மகாராட் டிராவில் இந்த தொற்று பரவாமல் இருப்பதில் அங்குள்ள சுகாதார அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இது குறித்து மகாராட்டிரா மாநிலத்தின் கண்காணிப்பு அதிகாரி மருத்துவர் பிரதீப் அவாதே கூறுகையில், ‘‘புதிய வைரஸ் தொற்றின் மரபணுதடயங்களை தீவிரமாக கண்காணிக்கிறோம். மகாராட்டிரா மாநிலத்துக்கு வரும் பன்னாட்டு பயணிகளிடம் உடல் வெப்ப பரிசோதனை மற்றும் 2 சதவீத பேரிடம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். பாதிப்பு உள்ளவர்களின் மாதிரிகள்,மரபணு வரிசையை கண்டறியும் பரிசோ தனைக்கு அனுப்பப்படுகின்றன.
மகாராட்டிராவில் 275 பேருக்கு எக்ஸ்பிபி வகை கண்டறிப்பட்டது. எக்ஸ்பிபி.1.5 மற்றொரு உருமாற்றம். இந்தியாவில் இதன் பரவல்தன்மை குறித்து எதுவும் தெரியவில்லை. ஆனால், இதன் ஊடுருவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கைகளை நாங்கள் எடுக் கிறோம். எதிர்ப்பு சக்தி மற்றும்இனரீதியாக இதன் பரவல் தன்மை அமெரிக்காவிலும், இந்தியாவிலும் வேறுபடலாம்’’ என்றார்.
வைராலஜிஸ்ட் டாக்டர் ஷகித்ஜமீல் கூறுகையில், ‘‘கடந்த ஓராண்டாக ஏற்பட்ட பல வகை தொற்றுக்கள் எல்லாமே ஒமிக்ரானில் இருந்து தோன்றியதுதான். முற்றிலும் புதிய வகை உருவாகாமல் இருக்கும் வரை, நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் 90 சதவீத வயது வந்தோர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர், 30 சதவீதம் பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்’’ என்றார்.
226 பேருக்கு கரோனா ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம்: நேற்று (31.12.2022) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 226 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4.46 கோடியாக உயர்ந்துள்ளது. மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளின் எண் ணிக்கை 3,653 ஆக உள்ளது.
நேற்று ஒரு நாளில் 3 பேர் கரோனாவால் உயிரிழந் துள்ளனர். இவர்கள் 3 பேரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,30,702 ஆக உயர்ந்துள்ளது.
தினசரி பாசிட்டிவ் விகிதம் 0.12 சதவீதமாகவும், வாராந்திர பாசிட்டிவ் விகிதம் 0.15 சதவீதமாகவும் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,87,983 பேருக்கு கரோனா பரி சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 22.10 கோடி பேருக்குகரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment