கழகத் தலைவர் பங்கேற்கும் பரப்புரை பெரும் பயணக்கூட்டத்தை சிறப்பாக நடத்த ஏற்பாடு சிவகங்கை மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 26, 2023

கழகத் தலைவர் பங்கேற்கும் பரப்புரை பெரும் பயணக்கூட்டத்தை சிறப்பாக நடத்த ஏற்பாடு சிவகங்கை மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

சிவகங்கை, ஜன. 26- சிவகங்கை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் இர.புகழேந்தி இல்லத்தில் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார் தலைமையில் நடைபெற்றது. மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், மண்டல தலைவர் கா.மா.சிகாமணி, மண்டல செயலாளர் அ.மகேந்திரராசன், மாவட்ட தலைவர் இர.புகழேந்தி, மாவட்ட செயலாளர் பெ.இராசாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடக்கத்தில் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் சிவகங்கை நகரில் நடை பெறும் சமூகநீதி பாதுகாப்பு, ‘திராவிட மாடல்' விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் வருகை தரவுள்ளதை முன்னிட்டு எவ்வாறு சிறப்பாக நடத்த வேண்டும் என்பதை விளக்கிப் பேசினார். பிறகு மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், கழக சொற்பொழி வாளர் தி.என்னாரெசு பிராட்லா, வேம்பத்தூர் க.வீ.செயராமன், பெரிய கோட்டை சந்திரன், கீழப்பூங்குடி முரு கேசன், பாலமுருகன், சாலைக்கிராமம் பழனிவட்டன், மு.வாசு, பெ.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சிவகங்கை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் திருமலை ஆ.முத்துராம லிங்கம் கலந்து கொண்டார். முடிவில் கீழப்பூங்குடி ஆ.முருகேசன் நன்றி கூறினார்.

தீர்மானம்

1. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும்பயணக்கூட்டத்தை வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் அன்று சிவகங்கை நகரில் பிரம்மாண்டமான முறையில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

2. பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு வருகை தரும் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது என்று தீர்மானிக்கப் பட்டது.

3.சிவகங்கை நகரில் ஆங்காங்கே கழகக் கொடிகளை ஏற்றுவது, புதிய உறுப்பினர்களை இயக்கத்தில் சேர்ப் பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

4. கழக ஏடுகளான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆகியவற்றிற்கு சந்தாக் களை சேர்ப்பது என்றும் தீர்மானிக்கப் பட்டது.

புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

மாவட்ட காப்பாளர் ச.இன்பலாதன்

மாவட்ட தலைவர் இர.புகழேந்தி

மாவட்ட செயலாளர் பெ.இராசாராம்

மாவட்ட துணை தலைவர் செ.தனபாலன், 

மாவட்ட துணை செயலாளர் வைகை ஆ.தங்கராசா,

மாவட்ட அமைப்பாளர் ச.அனந்தவேல்

சிவகங்கை நகரம்

தலைவர் மணிமேகலை சுப்பையா

செயலாளர் பெ.சிவக்குமார்

ஒன்றிய அமைப்பாளர் ஆ.முருகேசன், 

கீழப் பூங்குடி

மானாமதுரை நகரம்

தலைவர் ச.வள்ளிநாயகம்

செயலாளர் பா.முத்துக்குமார்

இளையான்குடி ஒன்றியம்

தலைவர் ம.சுந்தரராசன்

செயலாளர் வ.பழனிவட்டன்

சாலைக்கிராமம் நகரம்

தலைவர் தி.க.பாலு

செயலாளர் மா.வாசு

திருப்புவனம் ஒன்றியம்

தலைவர் குமார்,பெரமனூர்

செயலாளர் ராஜாங்கம்

சிங்கம்புணரி ஒன்றியம்

அமைப்பாளர் லெ.அன்புச்செழியன்

மாவட்ட தொழிலாளரணி 

தலைவர் க.வீ.செயராமன்

செயலாளர் மு.தமிழ்வாணன்

மாவட்ட விவசாய அணி

அமைப்பாளர் ம.சந்திரன், பெரிய கோட்டை

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்: 

சீ.பாலமுருகன் பெரிய கோட்டை


No comments:

Post a Comment