திருவனந்தபுரம், ஜன.2- மூடநம்பிக்கை மற்றும் தீய பழக்க வழக்கங்களுக்கு எதிரான சட்டத்தை அரசு கொண்டு வரும் என்று கேரள இடது ஜனநாயக முன்னணி முதல மைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். இதில் சிறீநாராயண குரு மேற்கொண்ட நகர்வு கள் ஊக்கமளிக்கின்றன என்றும் அவர் கூறினார். 90ஆவது சிவகிரி பயண மாநாட்டை துவக்கி வைத்த முதலமைச்சர் மேலும் பேசு கையில், “பகுத்தறிவுடன் சமூக சிந்தனையும் இணைந்த முற்போக்கு சமுதாய மாக கேரளா திகழ்கிறது. அந்த முற்போக்கு சமூகத்தை பின்னுக் குத் தள்ள இருண்ட சக்திகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. இன்னும் நிலைநிறுத் தப்படாத மறுமலர்ச்சிக்கு வலு வான தற்காப்பை ஏற்படுத்த வேண்டும். நாட்டின் வளர்ச்சியையும், மறுமலர்ச்சி சிந்தனையையும் இணைத்து முன்னேற வேண்டும் என்ற சிறீநாராயணகுருவின் போத னையை அரசும் கடைப்பிடிக்கிறது. சிறீ நாராயண குருவின் செய்தி கள் தனிமனித - பொது வாழ்க்கை யை தூய்மைப்படுத்தவும் மேம் படுத்தவும் பயன்பட வேண்டும். கல்வி, தூய்மை, விவசாயம், உடல் உழைப்பு போன்றவற்றை சிவகிரி பயணத்தின் நோக்கங்களாக குரு வலியுறுத்தினார்.
தொடர் சொற்பொழிவு நடத்தி சமு தாயத்தை இதன்பால் ஈர்க்க வேண்டும் என்றும் குரு சொன் னார். ஆடம்பரத்தாலும், ஓசைகளாலும் பயணத்தை மாசுபடுத்த வேண்டாம் என்றும், தேவை யில்லாமல் ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டாம் என்றும் குரு அறிவுறுத்தியதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். சிறீநாராயணகுரு, ஜன நாயகப் பூர்வமாக நடந்து கொண்டார். இது முற்றிலும் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். தன் கருத்தைத் திணிக்காமல், அதிலுள்ள நல்லதைப் புரிந்து கொண்டு எதிர்க் கருத்தை மாற்றும் ஜன நாயக முறையைக் கடைப்பிடித்தவர். அன்றைய சமூகத்தில் மூட நம்பிக்கைகளும் தவறான வழக்கங்களும் அதிகமாக இருந்தன. அவற்றைக் கையாள்வதில் குரு காட்டிய முன் மாதிரி பொருத்தமானது என்றார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன். மாநாட்டுக்கு சிறீ நாராயண தர்ம சங்க அறக்கட்டளை தலைவர் சுவாமி சச்சிதானந்தா தலைமை வகித்தார்.
No comments:
Post a Comment