சென்னை, ஜன. 1- தேசிய அளவில் மறுமலர்ச்சிப் பாதையில் கூட் டணிக் கட்சியான காங்கிரஸ் அதன் மதிப்பையோ, முக்கியத் துவத்தையோ இழந்துவிட்ட தாக தாம் நம்பவில்லை என்று முதலமைச்சரும், தி.மு.க. தலை வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்த லில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்கொள்வதற்காகப் பழைய பெரும் கட்சியையும் உள்ளடக் கிய ஒரு "தேசியக் கூட்டணி தேவை" என்றும், இந்தியாவிற்கு இப்போது தேவை "காங்கிரஸ் கட்சி மீண்டும் தன் பழைய பாதைக்கு திரும்புவதுதான்" என்றும் குறிப்பிட்ட முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் கள், காங்கிரஸ் "மீள் எழுச்சி" பாதையில் செல்கிறது என்றும் தெரிவித்துள்ளார். "சகோதரர்" என்று ராகுல் காந்தியைப் பாராட்டிய மு.க.ஸ்டாலின், அவர்தான் பா.ஜ.க.வின் "மதவாத" அரசியலுக்கு "சிறந்த மாற்று மருந்து" என்றும் தெரிவித்துள்ளார்.
பி.டி.அய். செய்திநிறுவனத் திற்கு தி.மு.க. தலைவரும், முத லமைச்சருமான மு.க.ஸ்டா லின் 28.12.2022 அன்று பேட்டி யளித்தார்.
அந்த சிறப்புப் பேட்டியில், நாட்டின் அரசியலமைப்பு அமைப்புகளின் சுதந்திரமான செயல் பாட்டைப் பாதுகாக்க பா.ஜ.க.வை எதிர்த்துப் போரா டுவதற்கு "தேசியக் கூட்ட ணியை" உருவாக்குவது முக்கி யம் என்று அவர் குறிப்பிட்டார்.
காங்கிரசின் 138ஆவது நிறு வன தினத்தை கொண்டாடிய நாளில் இந்தக் கருத்துகள் வெளிவந்தன. மாநில அள விலான வலுவான மாநிலக் கட்சி, தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள தமிழ் நாடு மாதிரி, நாடு முழுவதும் உள்ள மற்ற மாநிலங்களிலும் பின்பற்ற வேண்டிய முன் மாதிரி என்று தி.மு.க. தலைவர் தெரிவித்தார்.
ராகுல் காந்தி, தேர்தல் அடிப்படையில் மட்டுமல்ல, சித்தாந்த அடிப்படையிலும் பா.ஜ.க.வை எதிர்த்துப் போரா டுகிறார். காங்கிரஸ் தலைவரின் பாரத் ஜோடோ நடைப் பயணம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார். செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைப் பயணம் தொடங்குவதைக் குறிக்கும் வகையில், முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் ஒப்படைத்தார்.
ராகுல்காந்தியின் முயற்சி பலனளிக்கத் தொடங்கி யுள்ளது!
கட்சியின் அமைப்புக் கட்ட மைப்பை வலுப்படுத்த அய்க் கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கியுள் ளன என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.
ராகுல்காந்தியின் நடைப் பயணம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! இந்த நேர்காணலின் முதல் பகுதிகள் பின்வருமாறு:-
கேள்வி: இமாச்சலப் பிர தேசத்தைத் தவிர, நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற தேர் தல்களில் காங்கிரஸ் மிகவும் மோசமான நிலையைப் பெற்றுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அரசியல் வாய்ப்புகள் வீழ்ச்சியடைந்த தற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் அதன் மதிப்பையோ, முக்கியத்துவத் தையோ இழந்துவிட்டதாக நான் எண்ணவில்லை. காங் கிரசின் அமைப்புக் கட்ட மைப்பை வலுப்படுத்த சோனியா காந்தி எடுத்துள்ள முயற்சிகள் பலன் தரத் தொடங்கியுள்ளன. மூத்த தலை வர் (மல்லிகார்ஜுன்) கார்கே தனது பரந்த அனுபவத்துடன் கட்சியை மறுமலர்ச்சிக்கு இட்டுச் செல்கிறார்.
சகோதரர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப் பயணம் (பாரத் ஜோடோ யாத்திரை) மக்களிடையே எழுச்சியையும், பெரும் பர பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை உருவாக்கி வருகிறது. காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் மன உறுதி, புதிய உச்சத்தில் உள்ளது. காங்கிரஸ் மீண்டும் பழைய தன் பாதைக்கு திரும்பி உள் ளது. இந்தியாவுக்கு இது இப் போது அவசியம் தேவை.
நம்பிக்கைக்குரிய இளந் தலைவர் ராகுல்காந்தி!
கேள்வி: ராகுல் காந்தியின் அரசியல் தலைமையை நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ஆதரித்துள்ளீர்கள். குஜராத் தேர்தலில் தனது கட்சிக்கு பிரச்சாரம் செய்வதில் ராகுல் காந்தி இன்னும் குறிப்பிடத்தக்க பங்கை வகித்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? பா. ஜ.க.வுக்கு வலுவான எதிர்க் கட்சியாக உருவெடுக்க, தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தியால் வழி நடத்த முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
மு.க.ஸ்டாலின்: ராகுல் காந்தியை ஒரு நம்பிக்கைக்குரிய இளம் தலைவராக நான் காண் கிறேன். ப.சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள் குஜராத் தேர்தல் முடிவுகளில் காங்கிர சின் செயல்பாடுகளை அலசி ஆராய்ந்து தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி முன்வைக்கும் வாதங்கள் மிகவும் திடமானவை. அவர் பல முக்கியமான விஷயங்களில் தெளிவான அணுகுமுறையைக் கொண்டுள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மையே அதன் ஒருமைப்பாட்டைப் பாதுகாக் கிறது என்பதை அவர் புரிந்து கொண்டார். வகுப்புவாத வெறுப்பு அரசியலையும் ஒரு மொழி ஆதிக்கத்தையும் அவர் எதிர்க்கிறார்.
ராகுலை பா.ஜ.க. குறிவைப்பது ஏன்?
இந்தக் குணங்கள் அவரை பா.ஜ.க.வின் மதவாத (பார்ப் பனிய) அரசியலுக்கு சிறந்த மருந்தாக ஆக்குகின்றன. தேர்தல் அடிப்படையில் மடடு மல்ல; சித்தாந்த அடிப்படை யிலும் பா.ஜ.க.வை எதிர்த்து ராகுல் காந்தி போராடுகிறார். இதனால் தான் ராகுலை பா.ஜ.க. குறி வைத்துள்ளது. இது உண்மையான அவரது பலத்தை காட்டுகிறது. நமது அரசியலமைப்பு பாதுகாக்கப் பட வேண்டும்!
கேள்வி: காங்கிரஸ் கட்சியு டனான தேர்தல் கூட்டணி இதுவரை தி.மு.க.வுக்கு எப்படி உதவியது என்று நினைக்கி றீர்கள்? காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி வரும் தேர்தல்க ளிலும் தொடருமா? இன்னும் குறிப்பாக 2024இல் நடக்கவி ருக்கும் நாடாளுமன்றத் தேர்த லில்?
மு.க.ஸ்டாலின்: நமது அர சியலமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் உறுதியாக உணர்கிறோம். நமது மூத்த தேச நிறுவனத் தந்தைகள் எங்களிடம் ஒப்ப டைத்த அடிப்படை மதிப்புகள் மற்றும் கொள்கைகளில் எந்த ஆபத்தும் இருக்கக்கூடாது. நமது அரசியலமைப்பு நிறுவ னங்கள் சுதந்திரமாக செயல் பட வேண்டும் என்று விரும்பும் நாங்கள், இந்திய தேசிய காங் கிரசை உள்ளடக்கிய ஒரு தேசிய கூட்டணியை முன் மொழிகிறோம். தமிழ்நாட்டில் தி.மு.க., ஏற்கெனவே அப்படி ஒரு கூட்டணியை அமைத்து, அதை மற்ற இடங்களில் செயல் படுத்தும் வெற்றிகரமான மாதிரியாக மாற்றியுள்ளது.
-இவ்வாறு தி.மு.க. தலை வரும் - தமிழ்நாடு முதலமைச் சருமான மு.க.ஸ்டாலின் பி.டி. அய். செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment