சமூக நீதி வீரர் சரத் யாதவ் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 13, 2023

சமூக நீதி வீரர் சரத் யாதவ் மறைவு

பட்னா, ஜன. 13- பீகார் அரசி யலின் மிக முக்கிய தலை வரும் மேனாள் ஒன்றிய அமைச்சருமான சரத் யாதவ் 12.1.2023 அன்று இரவு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந் தார். இந்தியாவின் வட மாநில அரசியல் களத்தில் பீகார் தனித்துவமானது. மற்ற மாநிலங்களில் மதம் அரசியலோடு கலந்து வேறு இடத்திற்கு அரசி யலை நகர்த்தியது. ஆனால் பீகாரின் அரசியல் தலை வர்கள் இந்த நகர்வை தங்களது மாற்று அரசி யல் மூலம் கட்டிப்போட்டு வைத்திருந்தனர். அப்படி மாற்று அரசியல் களத்தை உருவாக்கிய தலைவர்க ளில் முக்கியமானவர்தான் சரத் யாதவ். கல்லூரி காலத்திலேயே மாணவர் தலைவராக இவர் உரு வெடுத்திருந்தார்.

படித்தது மருத்துவ மாக இருந்தாலும் அர சியல் பாடத்தின் மீது தான் இவருக்கு தீராத ஆர்வம் இருந்தது. அப் படி இவரது ஆர்வத்திற்கு தீனியிட்டவர் 'ராம் மனோகர் லோகியா'. மாணவர் தலைவர், இளைஞரணி தலைவர் அதன் பின்னர் மிசாவில் கைது - அங்கு கிடைத்த அரசியல் அனுபவம் எல்லாம் இவரை மாநிலத்தின் மிகப்பெரிய அரசியல் தலைவர்களில் ஒருவராக உருவாக்கியது. அதன் பின்னர் அய்க்கிய ஜனதா தளத்தை உருவாக் கினார்.

அப்போது வாஜ்பாய் பிரதமராக இருந்த கால கட்டம். அவருடன் அர சியல் கூட்டணி வைத்து ஒன்றிய அமைச்சரவை யில் பல துறைகளில் அமைச்சராக பணியாற்றி னார். தற்போது வரை 7 முறை மக்களவை உறுப் பினராகவும், 3 முறை மாநிலங்களவை உறுப்பி னராகவும் பணியாற்றி யுள்ளார். அதன் பின்னர் பாஜகவுடன் இவருக்கு பல தருணங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள் ளது. இதனையடுத்து அக் கட்சியுடன் கூட்டணி வைப்பதை தவிர்த்து வந் துள்ளார். ஆனால் 2017 ஆம் ஆண்டு தேர்தலை பாஜகவுடன் கைகோர்த்து எதிர்கொள்ள நிதிஷ் குமார் தீர்மானித்த நிலை யில் இவர் சண்டையிட்டு அக்கட்சியிலிருந்து வெளியேறினார்.

அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு 'லோக் தந்த் ரிக் ஜனதா தளம்' எனும் கட்சியை தொடங்கினார். இக்கட்சி எதிர் பார்த்த அளவுக்கு கைகொடுக்க வில்லை எனவே பாஜ கவை ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று தனது கட்சியை லாலு பிரசாத்தின் 'ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன்' 2022ஆம் ஆண்டு இணைத் தார். இந்நிலை யில் கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டிருந்த சரத் யாதவ் ஓரிரு நாட்களுக்கு முன்னர் குருகிராமில் உள்ள தனியார் மருத்து வமனையில் அனுமதிக்கப் பட்டார் இதனையடுத்து சிகிச்சை பலனின்றி நேற்று (12.1.2023) இரவு அவர் இயற்கை எய்தினார். இவருடைய மறைவுக்கு பல்வேறு அரசியல் தலை வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment