காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
புதுடில்லி, ஜன.2- இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 138ஆவது நிறுவன தினம் புதுடில்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் கடந்த 28.12.2022 அன்று கொண்டாடப் பட்டது. இதில், காங்கிரஸ் மேனாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மற்றும் ஜெய்ராம் ரமேஷ், மணி சங்கர் அய்யர், அம்பிகா சோனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், காங்கிரஸ் சேவாதள தொண்டர்கள் என பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:
"இந்தியா இன்று முன்னேறி இருப் பதற்குக் காங்கிரஸ் கட்சிதான் கார ணம். ஒடுக்கப்பட்ட சமூக மக்கள், ஏழைகள் ஆகியோரை முன்னேற்று வதில் காங்கிரஸ் கட்சி காட்டிய முனைப்பு காரணமாகவே வளர்ச்சி பரவலாக்கப்பட்டது. இதேபோல், இந் திய ஜனநாயகம் வலிமையாக இருப்ப தற்கும் காங்கிரஸ் கட்சிதான் காரணம்.
பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, காங்கிரஸ் கட்சியைச் சாராத 5 பேரை தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார். இதன்மூலம் அனைவருடனும் இணைந்து நாட்டை வலுப்படுத்த வேண்டும் எனும் கொள்கையை நடைமுறைப் படுத்திக் காட்டினார்.
ஆனால், இந்தியாவின் அடிப் படைக் கொள்கை கள் தற்போது தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. நாடு முழுவ தும் ஒருவித வெறுப்பு அர சியல் பரவிக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசின் தவறான செயல்பாட்டால் பண வீக்கமும் வே லை வாய்ப்பின்மையும் அதிகரித்திருக்கிறது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக் கப்பட்டு வருகின் றனர். ஆனால், ஒன்றிய அரசு இது குறித்து கவலைப்படுவதில்லை.
அனைவரையும் உள்ளடக்கிய அரசியல்தான் காங்கிரசின் அரசியல். இந்தப் பணியை ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மூலம் ஏற்கெனவே தொடங்கி விட்டார். இந்த நடைப்பயணம், எதிர் தரப்பை பதற் றப்பட வைத்துள்ளது. நாட்டை ஒருங்கிணைக்கும் நோக்கி லான இந்த நடைப்பயணத்தில் நாட்டு மக்கள் அனைவரும் இணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.”
-இவ்வாறு மல்லிகார் ஜூன கார்கே பேசியுள்ளார்.
No comments:
Post a Comment