செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 21, 2023

செய்திச் சுருக்கம்

உதவி

கடனில் மூழ்கியுள்ள இலங்கை, பன்னாட்டு நிதியத்திடம் ரூ.21,000 கோடி கடன் பெறத் தேவையான நிதி உத்தரவாதங்களை இந்தியா வழங்கி உதவி இருப்பதாக கொழும்பில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்!

ஏற்காது

மாதம் தோறும் மின் கட்டணம் மாறும் என்பது தவறான தகவல். ஒன்றிய அரசு மின்சார திருத்த சட்டம் கொண்டு வருவதை திமுக ஏற்காது என மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தகவல்.

தேர்வுக்கான...

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் குரூப்-3 போட்டித் தேர்வுக்கான அனுமதி சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வு கட்டுப் பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தகவல்.

ஒப்படைக்க

வங்கிக் கணக்கில் உள்ள விவரங்கள் இல்லாத, மின்னணு மூலம் நிதிகளை வரவு வைப்பதற்கு உரிய நாளில் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு 8.62 சதவீதம் தமிழ்நாடு மாநில வளர்ச்சி கடன் 2023 தொடர்பான கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்கள், அவர்களுடைய கடன் பத்திரங்களை, 20 நாள்களுக்கு முன்னதாகவே, பொதுக் கடன் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

அதிகரிப்பு

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம், பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகையும், அவர்களின் கல்வித் திறனும் அதிகரித்துள்ளது என சேலத்தில் ஆய்வு செய்த சமூக நலத் துறை அமைச்சர் கீதாஜீவன் தகவல்.

அனுமதி

ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்திறன் தேர்வை தமிழ் உள்பட 13 மொழிகளில் எழுதுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.

அபராதம்

விமானத்தில் மூதாட்டி மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநகரம் ரூ.30 லட்சம் அபராதம் விதிப்பு.


No comments:

Post a Comment