முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை அதிகரிப்பு அமைச்சர் கீதாஜீவன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 21, 2023

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை அதிகரிப்பு அமைச்சர் கீதாஜீவன் தகவல்

சென்னை, ஜன.21 முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம், பள்ளிகளுக்கு மாணவர் களின் வருகையும், அவர்களின் கல்வித்திறனும் அதிகரித்துள்ளது என்று, சேலத்தில் ஆய்வு செய்த அமைச்சர் கீதாஜீவன் கூறினார். 

தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், நேற்று (20.1.2023) காலை   சேலம் மணக்காடு மாநகராட்சி துவக்கப் பள்ளியில், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டப்பணியை   ஆய்வு செய்தார். அதில், சமையல் கூடம், உணவை அனுப்பி வைக்கும் வாகனத்தை பார்வையிட்டார். தொடர்ந்து மாணவர்களுக்கு பரிமாற வைத்திருந்த உணவு வகைகளை அமைச்சர் ருசி பார்த்தார். பின்னர், மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண் டியை பரிமாறினார். ஆய்வை தொடர்ந்து, அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், முதலமைச்சரின் உன்னதமான திட்ட மாகும். சேலம் மாவட்டத் தில் இத்திட்டத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்திருக்கிறேன். மிகவும் தரமாக உணவு சமைத்து, மாணவர்களுக்கு வழங்கு கிறார்கள். உணவு கூடம், மாணவர்கள் சாப்பிடும் இடத்தில் ஷெட் அமைத்து, உட்கார்ந்து சாப்பிட டேபிள், சேர் நல்லமுறை யில் வைத்துள்ளார்கள். இதேபோல், அனைத்து பள்ளிகளிலும் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக் கப்படும். முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் பள்ளிக்கு மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. அவர்களின் கல்வித் திறனும் மேம்பட்டிருக்கிறது. இவ் வாறு அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.


No comments:

Post a Comment