சென்னை, ஜன. 30- ஆளின்றி தானாக மின் பயன் பாட்டைக் கணக்கெடுக்கும் ஸ்மார்ட்மீட்டர், தமிழ்நாட்டில் முதல்கட்டமாக ஒரு கோடி வீடுகளில் பொருத்தப்பட உள்ளன. தமிழ்நாடு மின்வாரியம் வீடுகளில்2 மாதங்களுக்கு ஒருமுறை மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்கிறது. இப்பணியில் ஈடுபடும் ஊழியர்கள் சிலர், குறித்த காலத்துக்குள் கணக்கெடுப்பது இல்லை என்றும், இதனால், அதிகக் கட்டணம் வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஒன்றிய அரசு உத்தரவின்படி, கருநாடகா, டில்லி உள்ளிட்டமாநிலங்களில் ஆளின்றி மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மின்பயன்பாட்டைக் கணக் கெடுக்கும் தேதி, மென்பொருள் வடிவில்ஸ்மார்ட் மீட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தொலைத் தொடர்பு வசதியுடன் அலுவலக சர்வரில் இணைக்கப்படும். குறிப்பிட்ட நாள்வந்ததும் தானாகவே மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்டு, நுகர்வோ ருக்கு எஸ்எம்எஸ் மூலம்தகவல் அனுப்பப்படும். இதனால், எவ்வித முறைகேடும், காலதாமதமும் இல்லாமல் மின்ப யன்பாடு கணக்கிடப்படும். தமிழ்நாட்டில் சோதனை ரீதியாக சென்னை தியாகராய நகரில் ரூ.140 கோடி செலவில் 1.45 லட்சம் மின்இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள் ளன. இந்த திட்டத்தை தமிழ்நாடுமுழுவதும் செயல்படுத்து வதற்கான தொழில்நுட்ப விவரங்களை அளிக்கும் பணியை தமிழ்நாடு தொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை நிறு வனத்திடம் மின் வாரியம் வழங்கியது. இந்நிறுவனம் தனது அறிக்கையை மின்வாரியத்திடம் சமர்ப்பித்துள்ளது. இதைய டுத்து, தமிழ்நாட்டில் உள்ள 2.30 கோடி வீட்டு மின் இணைப்பு களிலும் ஸ்மார்ட் மீட்டர்பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக ஒரு கோடி வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளது. அரசு அனுமதி வழங்கியதும் இந்தப் பணிஉடனே தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித் தனர்.
Monday, January 30, 2023
ஆளின்றி மின் பயன்பாட்டை கணக்கிட வீடுகளில் வருகிறது `ஸ்மார்ட் மீட்டர்'
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment