புதுடில்லி, ஜன.27- மாநிலங்களவையில் கழகக் குழுத் தலைவர் திருச்சி சிவா தனி நபர் மசோதா ஒன்றை அறிமுகம் செய்திருந்தார். திருச்சி சிவா கொண்டு வந்த தனிநபர் மசோதாவில் இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்கிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மசோதாவிற்கு தற்போது குடியரசுத் தலைவர் அவர்கள் ஒப்புதல் அளித்து விவாதத்திற்கு ஏற்றுக் கொண்டுள் ளார். இந்த மசோதா நிறை வேற்றப்பட்டால் தமிழ் ஆட்சி மொழி யாகும். இது தி.மு.கழகத்தின் வெற்றிப் படிக் கட்டு களில் ஒன்றாக அமையும்.
மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அறிமுகப் படுத்திய ஆட்சி மொழி / அலுவல் மொழி சட்டமுன் வரைவு - 2022 ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவிடமிருந்து மாநிலங்களவை செயலாளருக்கு அனுப்பப் பட்ட நாளிட்ட கடித எண். 21017/01/2022 ஆர்.பி. (கொள்கை) மாநி லங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா அவர்களால் தனி நபர் மசோதாவாக கொடுக்கப்பட்ட ஆட்சி மொழி / அலுவல் மொழி சட்டமுன் வரைவு 2022இன் உட்பொருள் குடியரசுத் தலைவர் அவர்களுக்கு தெரிவிக்கப் பட்டு அரசமைப்புச் சட்டப்பிரிவு 117 (3)இன் படி அந்த சட்டமுன் வரைவு மாநி லங்களவையின் பரிசீலனைக்கு அவர் (குடியரசுத் தலைவர்) பரிந்துரைக்கிறார்.
இதுகுறித்து திருச்சி சிவா கூறியிருப்பதாவது:- அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளையும் இந்தி யாவின் ஆட்சி மொழிகளாக்கிட வேண்டும் என்று நான் (திருச்சி சிவா) அறிமுகம் செய்திருந்த தனி நபர் மசோதாவினை மாநிலங்களவை விவாதிக்கலாம் என்று ஒப்புதலை குடியரசுத் தலைவர் வழங்கி இருக்கிறார்.
இது ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி, வீரவணக்க நாள் கூட்டத்தின் அதே தினத்தன்று தமிழை ஆட்சி மொழியாக்கும் தனிநபர் மசோதாவை விவாதிப்பதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்திருப்பது திராவிட முன் னேற்றக் கழகத்தின் வெற்றிப் படிக் கட்டுகளில் ஒன்றாகும். - இவ்வாறு திருச்சி சிவா குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment