சென்னை, ஜன. 17- சென்னை கொண்டித்தோப்பில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில், குடும்பத்தினருடன் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் விழாவைக் கொண்டாடினார்.
தமிழர் திருநாளான பொங்கல் விழா மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தனது குடும்பத்தினருடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொண்டித்தோப்பு பகுதியில் அமைந்துள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினார். இந்த நிகழ்வில் காவலர் குடியிருப்பில் உள்ள காவல்துறையினரும் தங்கள் குடும்பத்தினர் சகிதமாக கலந்துகொண்டனர்.இந்த உற்சாக மான நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா ஆகியோர் கலந்துகொண்டனர். பொங்கல் விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறையின் தலைவர் சைலேந்திர பாபு மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment