ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், 2024 ஆம் ஆண்டை வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டாகக் கொண்டாட கேரளாவில் 1001 பேரைக் கொண்டு கேரளம் தழுவிய செயல் கமிட்டியை அமைத்துள்ளனர்.
ஹிந்து ஒற்றுமைக்கான விழாவாக - நூற்றாண்டு விழாவை நடத்திடத் திட்டமாம்!
நாயும், கழுதையும், பன்றியும்கூட நடமாடிய வைக்கம் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில், ஆறறிவு படைத்த மனிதர்களை - அவர்கள் கீழ்ஜாதி - பார்க்கக் கூடாதவர்கள், நெருங்கக் கூடாதவர்கள், தொடக்கூடாதவர்கள் என்று ஒதுக்கி, தண்டித்த கொடுமை ஏற்படுத்தியதை எதிர்த்து, ஹிந்து சனாதனத்தை எதிர்த்து தந்தை பெரியார் தலைமையில், தொடர்ந்து நடந்த அறப்போர்தானே - வைக்கம் சத்தியாகிரகம்?
அதற்கும், அப்போது 1924 இல் பிறக்காத ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் என்ன சம்பந்தம்?
காங்கிரஸ் கட்சி கொண்டாடினால், பெரியாரிஸ்டுகள், ஜாதி ஒழிப்பாளர்கள், முற்போக்காளர்கள் கொண்டாடினால் நியாயம் இருக்கிறது. ஆனால், பிறக்காத ஆர்.எஸ்.எஸ். கொண்டாடுவது எதற்காக?
வாக்கு வங்கி அரசியலுக்காகவா?
தந்தை பெரியார் பங்கை மறைத்து இருட்டடிக்கும் வேலைக்காகவா?
வைக்கம் போராட்டத்தைத் திசை திருப்பவா?
வரலாற்று திரிபுவாதத்திற்காகவா?
இதுகுறித்து ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் விளக்கமான விரிவான அறிக்கையை நாளைய 'விடுதலை'யில் எதிர் பாருங்கள்!
No comments:
Post a Comment