30.1.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கையை எதிர்க்கும் வகையில், நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க தனது பி.ஆர்.எஸ். கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கே.சந்திரசேகர ராவ் உத்தரவு.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தமிழ்நாட்டில் இயங்கும் ஒன்றிய அரசு அலுவல கங்களில் தமிழ்நாட்டவர்க்கு முன்னுரிமை, நீட் தேர்வு விலக்கு மசோதா போன்ற தமிழ்நாட்டு உரிமைகள் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.
தி இந்து:
* ஓபிசி பிரிவினரில் உள் ஒதுக்கீடு குறித்து பரிந்துரை செய்திட அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி தலைமையிலான ஆணையத்திற்கும் ஜூலை 2023 வரை மேலும் ஆறு மாதத்திற்கு நீட்டிப்பு வழங்கி ஒன்றிய அரசு உத்தரவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* எதிர்க்கட்சிகளுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் பாஜக-ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு எதிராக ஒன்றுபட்டுள்ளன என ராகுல் காந்தி கருத்து.
தி டெலிகிராப்:
* மூத்த பத்திரிகையாளர் சசி குமார் மத அடிப் படையில் பிற சமூகத்தை அழித்திட நினைக்கும் ஒன்றிய அரசின் பெரும்பான்மை வாதத்தை விருப்பத்துடன் சில ஊடகங்கள் ஆதரவளிப்பது வெட்கத்திற்குரிய விசயம் என்று கூறினார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment