பாட்னா,ஜன.26- மாநிலங்கள் கடன் வாங்குவதில் ஒன்றிய அரசு தலையிடுவதாக பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
பீகாரில் பா.ஜ.க.வு டன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்து ஆட்சி அமைத்த அய்க்கிய ஜன தாதளம் கட்சி தலைவ ரும், முதலமைச்சருமான நிதிஷ்குமார், கடந்த ஆகஸ்டு மாதம் திடீரென கூட்டணி மாறினார். அவர் பா.ஜ.க. கூட்ட ணியை முறித்துக் கொண்டு, ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் மெகா கூட்டணியில் சேர்ந்து புதிய அரசை அமைத்தார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதி ராக எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் இணைக் கும் முயற்சியில் ஈடுபடப் போவதாக நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று (25.1.2023) அவர் பாட்னாவில் செய்தியா ளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் எழுப்பிய கேள்விகளும், அவர் அளித்த பதில் களும் வருமாறு:-
கேள்வி:- ஒன்றிய பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்:- ஒருவர் என்ன எதிர்பார்க்க முடியும்? பீகாருக்கு ஒன்றிய அரசு பெரிய அளவில் உதவ வேண்டும், சிறப்பு தகுதி வழங்க வேண்டும் என்று வைத்த கோரிக்கைகள் இன்னும் நிறை வேற்றப் படவில்லை.
கேள்வி:- ஒன்றியத்தில் ஆளும் கூட்டணியில் இருந்து நீங்கள் வெளி யேறிய பிறகு நிலைமை மோசமாக மாறிவிட் டதா?
பதில்:- நாங்கள் கூட் டணியில் ஒன்றாக இருந்த போதும் அவர்கள் மாநி லத்துக்கு என்று எதையும் செய்தது இல்லை. அவர் கள் அதைத்தான் இப் போதும் செய்கிறார்கள். ஏழ்மை நிலையில் உள்ள மாநிலங்களை முன்னேற் றாமல், அவர்கள் நாட்டை முன்னேற்றுவது குறித்து எப்படி எண்ண இயலும் என்பது எனக்கு வியப்பை அளிக்கிறது.
அவர்கள் பிரச்சாரத் தில் ஈடுபடுவதைத் தவிர வேறு எதையும் செய்வ தில்லை. அவர்கள் அரசி யல் ஆதாயம் எதிர்பார்க் கிற இடங்களில் மட்டுமே தங்கள் கவனத்தைச் செலுத் துகிறார்கள். அவர்கள் தங்கள் அரசியல் லாபங் கள் குறித்து மிகையாக மதிப்பிடுவதுபோல தெரிகிறது.
நம்மைப்போன்ற ஏழை மாநிலங்கள், தங் களைத்தாங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலைதான் உள்ளது. முன்பு ஒன்றிய நிதி இல்லாதபோது அதைக் கடன் வாங்கி ஈடுகட்டினோம். இப் போது அதுவும் நிறுத்தப் பட்டு விட்டது. இது போன்ற ஒன்றிய அரசின் தலையீட்டை நாங்கள் ஒருபோதும் பார்த்தது கிடையாது.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
No comments:
Post a Comment