பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பலை! எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்க! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 2, 2023

பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பலை! எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்க!

ராகுல்காந்தி வேண்டுகோள்

புதுடில்லி, ஜன. 2- 'பா.ஜ.வு.க்கு எதிராக நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்ப் பலை நிலவுகிறது. ஆனால் இது வெளியில் தெரியாமல் உள்ளது. எனவே எதிர்க் கட்சிகள் தொலை நோக்கு பார்வையுடன் ஒன்றிணைந் தால் வெற்றி நிச்சயம்' என காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

டில்லியில் செய்தியாளர்களுக்கு ராகுல் காந்தி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ஒற்றுமை நடைப்பயணம் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த பா.ஜ.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் எந்தளவுக்கு முயற்சி செய்கி றதோ, அந்தளவுக்கு நடைப்பயணம் சிறப்பாகவே நடந்து வருகிறது. இது மக்கள் மத்தியில் செயல்படுதல் மற்றும் சிந்தித்தலில் புதிய வழியை வழங் குவதற்கான கட்டமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த நடைப் பயணத்தின் போது பாதுகாப்பு விதிகளை பல முறை நான் மீறியதாக ஒன்றிய பா.ஜ. அரசு திட் டமிட்டு என் மீது வழக்கு போட முயற்சிக் கிறது. அதேபோல கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை காரணம் காட்டி நடைப்பயணத்தை நிறுத்த முயற் சிக்கின்றனர்.

இந்த விஷயத்தில் அரசு அமைப் புகள் பாரபட்சமாக செயல்படுகின்றன. பா.ஜ.வின் சாலைப் பேரணிகள் மட்டும் கரோனா விதிமுறை களை மீறாதது எப்படி சாத்தியம்? நான் குண்டு துளைக்காத காரில் நடைப்பயணம் செல்ல வேண் டுமென உள்துறை அமைச் சகம் கூறுகிறது. அதை எப்படி செய்ய முடியும்? நான் நடைப்பயணம் மேற்கொள்கிறேன். அதற்கு தகுந்த பாதுகாப்பைதானே அவர்கள் தர வேண்டும்? இதையும் ஒரு பிரச்சினையாக்க மட்டும்தான் பார்க் கின்றனர்.

 ஆனால் பா.ஜ.க. என்ன செய்தாலும் இந்த நடைப் பயணத்தை நிறுத்த முடியாது. இதில் கரோனா தொற்று நோயை பயன் படுத்தும் அற்ப அரசி யலை அவர்கள் கைவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

வெறுப்புக்கு எதிராக தேசத்தை ஒன்றிணைப்பதே இந்த நடைப் பயணத்தின் நோக்கம். அன்பான இந்தியாவை விரும்பும் அனைவருக் கும் இந்த நடைப்பயணத்தின் கதவுகள் திறந்தே உள்ளன. எங்களுடன் இணையும் யாரையும் நாங்கள் தடுப்ப தில்லை. அகிலேஷ், மாயாவதி மற்றும் பலரும் நடைப்பயணத்தில் பங்கேற்க விரும்புகிறார்கள். இது எங்களுக்கு வெற்றிகரமான நடைப் பயணம். இப்போது நாட்டில் பா.ஜ. வுக்கு எதிராக மிகப்பெரிய மறைமுக எதிர்ப்பலை வீசுகிறது.

இது வெளியில் தெரியா மல் இருக்கிறது. எனவே, எதிர்க்கட்சிகள் தொலை நோக்கு பார்வையுடன் ஒன்றிணையும் போது, பா.ஜ.க. அவ்வளவு எளி தில் வெற்றியை பெற்று விட முடியாது.

 ஆனால் சில அரசியல் நிர்ப்பந்தங் கள் இருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். அதை எல்லாம் ஒதுக்கி வைத்து எதிர்க்கட்சிகள் திறம் பட ஒன்றிணைய வேண்டும். மாற்று பார்வையுடன் மக்களை அணுக வேண்டும். அப்போது நமது வெற்றி நிச்சயமாகும். அனைத்து எதிர்க் கட்சிகள் மீதும் நாங்கள் மரியாதை கொண்டுள்ளோம். 

-இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா வாடகைக்கு வாங்கும் தேசமாக இல்லாமல் உற்பத்தி செய்யும் தேசமாக இருக்கவேண்டுமென ராகுல் கூறினார். மாணவர்கள் மருத்துவம், பொறியியல், சிவில் சர்வீஸ் மற்றும் சட்டம் ஆகிய துறைகளுக்கு அப்பால் சிந்திக்கும்கற்பனை சிறகுகளை தரக்கூடிய வகையில் கல்விக் கொள்கை இருக்கவேண்டுமென வலியுறுத்தினார். 

அதிக பொரு ளாதார சமத்துவம் இருக்க வேண்டுமென கூறிய ராகுல், பெரிய தொழில் நிறுவ னங்களுக்கு ஆதரவு தருவதாகவும் அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறினார். 

அதே சமயம், தொழில் துறையை 2,3 தொழி லதிபர்கள் கட்டுப்படுத்துவதை எதிர்ப்பதாக கூறினார்.


No comments:

Post a Comment